“சிக்கனமாக இருப்பது பாதி வெற்றிக்குச் சமம்”: உலக சிக்கன நாள்  பொன்மொழிகள் 10

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாக உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.

உலக சிக்கன தினத்தை ஸ்பெய்ன் நாட்டினர் கடந்த 1921ஆம் ஆண்டு முதன்முதலாக கொண்டாடினர். இத்தாலியின் மிலன் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு கடந்த 1924-ம் ஆண்டு நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டும் என்பதற்காக, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. உலக சிக்கன தினம் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 31 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த தினம் என்பதால், இந்தியாவில் சிக்கன தினம் அக்டோபர் 30-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர், “தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் திருடன்” என்று குறிப்பிட்டார். அவசிய, அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி மீதியை சேமித்து வைத்தல்தான் சிக்கனம். இன்றைய தொழில்நுட்ப தலைமுறையில் பணபரிவர்த்தனைகள் கூட டிஜிட்டல் முறையில் நடைபெற்று வரும் நிலையில், சிக்கனம் என்பதன் அர்த்தமும் பொருளும் பரந்துபட்டநிலையில் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அவசரகதியில் சுயநலத்துடன் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று சிக்கனத்தின் தேவை பொருளாதாரத்தைத் தாண்டி நீர், நிலம், உணவு, எரிபொருள், மின்சாரம் என நீள்கிறது. சிக்கனமாக வாழ நம் முந்தைய தலைமுறை சொல்லித்தந்த பொன்மொழிகளில் பத்து பொன்மொழிகள் இதோ…

1. வாழ்க்கையில் சிக்கனமாக இருப்பது பாதிவெற்றிக்குச் சமம்
2. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
3. சேமிப்பு செழித்து வளர சிறந்த வழி சிக்கனம்
4. வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம்; செலவு அறிந்து வரவை சேமிப்பது நற்குணம்
5. சிக்கனம் வீட்டைக் காக்கும்,சேமிப்பு நாட்டைக் காக்கும்
6. சிறுகக் கட்டி பெருக வாழ்
7. சிக்கனம் என்பது கஞ்சத்தனம் இல்லை; செலவு செய்யும் விதம்
8. எதிர்கால பொறுப்புடன் செயல்படுவது சிக்கனம்
9. சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்
10. வளத்தின் ஒரு உழைப்பு ஒரு கை சிக்கனம்

அக்டோபர் 30 :இந்தியாவில் சிக்கன நாள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in