

மதுரை: பொன்னியின் செல்வன் கதைக்கும், திருவாசகத்துக்கும் தொடர்பு உள்ளதாக கேரள ஐஏஎஸ் அதி காரி எம்.ஜி.ராஜமாணிக்கம் பேசினார். பேஷ்கார் எம்.குருசாமி நினைவு அறக்கட்டளை சொற் பொழிவு மதுரை செந்தமிழ் கலை கல்லூரியில் நேற்று நடந் தது. முதல்வர் கி.வேணுகா வர வேற்றார். நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் ச.மாரியப்ப முரளி தலைமை வகித்தார்.
இளங்கோ முத்தமிழ் மன்றத் தலைவர் சண்முகஞானசம்பந்தன், `திருவாசகத்தேன்' என்ற தலைப்பில் பேசினார். திருவாசகத்தின் பெருமை குறித்து கேரள மாநில ஊரக வளர்ச்சித் துறை ஆணை யர் எம்.ஜி.ராஜமாணிக்கம் பேசிய தாவது:
ஐஏஎஸ்ஸில் தமிழ் இலக் கியத்தைப் பாடமாகக் கொண்டு முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். பொன்னியின் செல்வன் படத்துக்கும், திருவாசகத்துக்கும் நிறைய தொடர்பு உள்ளது. அருண்மொழிவர்மன் யாரென் றால் நாம் பெருமையாகப் புகழக் கூடிய ராஜராஜன். பன்னிரு திருமுறைகளை தொகுத்தது நம்பியாண்டார் நம்பி.
இதைத் தொகுக்கத் தூண்டுகோலாக இருந்தவர் ராஜராஜன். அவர் கோயில்களுக்கு செல்லும் போதெல்லாம் அங்கு பாடப்படும் பாடல்களை கேட்கிறார். அவர் கேட்டது தேவாரப் பாடல்கள். இந்த பாடல்களின் இனி மையால் கவரப்பட்டதால் அதை தொகுக்கச் சொன்னார். ஆனால் தொகுக்கப்பட்டது திரு வாசகம்.
பக்தி மீது நம்பிக்கை இல் லாதவர்கள் திருவாசகத்தைப் படிக்க விரும்பினால் காதலாக நினைத்து படியுங்கள். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதோர் நமச்சிவாயா, ஈசன், சிவபெருமான் என்பதை எல்லாம் விட்டுவிட்டு காதலாக நினைத்து படித்தால் கூட திருவாசகத்தில் காதல் சொட்டும்.
திருவாசகம் பக்தி இலக்கியம். சொல்லும், மொழியும், பொரு ளும், இலக்கிய நயத்துடன் படைக்கப்பட்டது திருவாசகம். மதுரை மண்ணுக்குரியது. திரு வாசகத்தை இலக்கியமாகப் படித்தால் இலக்கியம். பக்தியாகக் கருதி படித்தால் பக்தி. அதை என்னவாக நினைத்து படிக் கிறோமோ அது மாதிரி. அது படைக்கப்பட்ட காலத்தில் மக் களிடம் புழக்கத்தில் இருந்த சாதாரணமான வார்த்தைகளைப் பயன்படுத்தியே படைக்கப்பட்டது.
இலக்கிய சுவையும், நயமும் கொண்ட மிகப்பெரிய பொக்கிஷம். மாணவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருவாசகத்தை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.