Published : 14 Oct 2022 12:54 PM
Last Updated : 14 Oct 2022 12:54 PM

ஃபரிதாபாத் | மோட்டார் சைக்கிளில் இட்லி - சாம்பார் விற்கும் பி.காம் பட்டதாரி: சமூக வலைதளத்தில் வைரல்

வீடியோ ஸ்க்ரீன்ஷாட்.

ஃபரிதாபாத்: வாகனங்கள் பரபரக்கும் இந்திய சாலையின் ஓரத்தில் மோட்டார் சைக்கிளில் இட்லி - சாம்பார் விற்பனை செய்து வருகிறார் பி.காம் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர். அவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் தனது சுய தொழில் குறித்து அவர் விவரித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். அதனை கவனித்த உணவு சார்ந்த கன்டென்டுகளை பதிவு செய்து வரும் பிளாகர் ஒருவர் தனது ‘ஸ்வேக் சே டாக்டர்’ என்ற சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சுமார் 6 லட்சம் வியூஸ்களை அள்ளியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இட்லி - சாம்பார் விற்பனை செய்து வரும் இளைஞரின் பெயர் அவினாஷ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வணிகவியலில் (பி.காம்) இளங்கலை பட்டம் முடித்துள்ளார். தொடர்ந்து மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். இருந்தாலும் அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. அதே நேரத்தில் நிதி சிக்கல் காரணமாக அதை தவிர்த்து வந்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் செய்துவந்த வேலையை இழந்துள்ளார். உடனடியாக வாழ்வாதாரம் வேண்டி தனது பைக்கை நடமாடும் கடையாக மாற்றி உள்ளார். அவரது மனைவி சென்னையைச் சேர்ந்தவராம். அதனால் அவருக்கு தென்னிந்திய சமையல் கைவந்த கலையாம். தனது மனைவியின் சமையல் பக்குவத்தை தனது தொழில் வாய்ப்பாக அவினாஷ் மாற்றியுள்ளார். அவரது மனைவியும் அதற்கு துணை நின்றுள்ளார். 2 இட்லி அடங்கிய ஒரு பிளேட் இட்லி - சாம்பாரை அவர் 20 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்து வருகிறார்.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் தற்போது இந்த தொழிலை அவினாஷ் கவனித்து வருகிறார். தலைநகர் டெல்லி உட்பட சில வட இந்திய பகுதியில் தென்னிந்திய உணவுகளுக்கு மவுசு அதிகம். குறிப்பாக அவர்கள் தேங்காய் சட்னியை அதிகம் விரும்புவார்கள் என சொல்லப்படுகிறது. இதை கவனித்த நெட்டிசன்கள் பலரும் அவினாஷின் முயற்சியை வாழ்த்தி உள்ளனர்.

A post shared by Swag Se Doctor (@swagsedoctorofficial)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x