காவிரி புத்தகப் பயண பேருந்துக்கு ஈரோட்டில் வாசகர்கள் வரவேற்பு

என்பிடி நிறுவனம் சார்பில் காவிரி புத்தகப் பயணம் எனும் நடமாடும் புத்தகக் கண்காட்சி பேருந்து ஈரோடு வந்தது. பேருந்தில் இருந்த புத்தகங்களை ஆர்வத்தோடு பார்வையிட்ட வாசகர்கள்.
என்பிடி நிறுவனம் சார்பில் காவிரி புத்தகப் பயணம் எனும் நடமாடும் புத்தகக் கண்காட்சி பேருந்து ஈரோடு வந்தது. பேருந்தில் இருந்த புத்தகங்களை ஆர்வத்தோடு பார்வையிட்ட வாசகர்கள்.
Updated on
1 min read

ஈரோடு வந்த நடமாடும் புத்தகக் கண்காட்சி பேருந்துக்கு வாசகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மத்திய அரசின் புத்தக நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட் (என்பிடி) சார்பில் `காவிரி புத்தகப் பயணம்' என்ற பெயரில் நடமாடும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

காவிரியின் பிறப்பிடமான கர்நாடக மாநிலம் குடகுப் பகுதியிலிருந்து, கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி, ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை வழியாக நேற்று ஈரோடு வந்தது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே, நடமாடும் புத்தகக் கண்காட்சி பேருந்தை வாசகர்கள் வரவேற்றனர். கல்லூரி மாணவ, மாணவியர் புத்தகங்களை பார்வையிட்டனர்.

இன்று வரை கண்காட்சியை பார்வையிடலாம். இதன் தொடர்ச்சியாக,காவிரிக் கரையோர நகரங்களிலும் கிராமங்களுக்கும் பயணிக்கும் இந்த பேருந்து, மயிலாடுதுறை அருகில் கடலோடு காவிரி கலக்கும் பகுதி வரை சென்று அக்டோபர் 25-ம் தேதி நிறைவடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in