

1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக கவிஞர். அரபு கவிஞர்களில் மிகவும் பிரபலமானவர் ரூமி. இந்திய அமீர் குஸ்ரோவின் (1253-1325) காலத்தை சேர்ந்தவர் ரூமி.
ரூமி தனது படைப்புகளை தனது 50 ஆம் வயதிலிருந்துதான் எழுதத் தொடங்குகிறார்.இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. எனினும் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். ரூமியின் கவிதைகள் உலகின் பல நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ரூமியின் கவிதைகள் பெரும்பாலும் காதலை கொண்டாடியது. ரூமி கொண்டாடிய காதல் ஆண் - பெண் இடையேயான காதல் மட்டும் அல்ல.. அது இந்த பிரபஞ்சத்தின் மீது ஈர்ப்பு கொண்ட அனைத்தின் மீதான காதலாக இருந்தது.
ரூமி எழுதிய கவிதைகளில் சில..
* அழகு நம்மைச் சுற்றியே உள்ளது, ஆனால் நாம் வழக்கமாக ஒரு பூங்காவில் நடந்தே அழகைத் தெரிந்து கொள்கிறோம்.
* துயரப்பட வேண்டாம். நீங்கள் இழக்கும் எதுவாயினும் மற்றொரு வடிவத்தில் உங்களிடமே திரும்பவும் வரும்.
* நாம் அனைவரும் அன்பாலேயே பிறந்துள்ளோம்; அன்பு நமது தாய்.
* நமக்குள் கண்ணுக்குத் தெரியாத வலிமை ஒன்று உள்ளது.
* நீங்கள் இறகுகளுடனே பிறந்துள்ளீர்கள், ஏன் வாழ்க்கையில் தவழ்ந்து செல்ல விரும்புகிறீர்கள்?
* தொடர்ந்து தட்டிக்கொண்டே இரு... உள்ளிருக்கும் ஆனந்தம்... என்றேனும் சாளரத்தைத் திறந்து எட்டிப் பார்க்கும்...
எவர் வந்திருக்கிறார் என..
* உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல.
* கவிதைகளின் உள்ளிருக்கும் துடிப்புகளை கேள்.. அவை விரும்பும் இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்லட்டும்
* உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளை தொடர்ந்து கொண்டே இரு.. அதன் அருகாமையை நழுவ விடாதே
ஒருபோதும்..
*காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக இருந்து வருகிறார்கள்
காலம்காலமாக..
* தாகம் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை, தண்ணீரும் தாகத்தை தேடுகிறது.
* காதலைவிட முக்கியமானது உலகில் எதுவுமில்லை, காதல் காற்றைப் போன்றது..
* நீ எதை தேடிக்கொண்டிருகிறாயோ... அது உன்னை தேடிக் கொண்டிருக்கிறது...
செப்டம்பர் 30.. ரூமி பிறந்ததினம்