Published : 17 Sep 2022 01:02 PM
Last Updated : 17 Sep 2022 01:02 PM

சிறுத்தை Vs சிவிங்கிப் புலி... வேறுபாடுகள் என்னென்ன? - ஒரு விரைவுப் பார்வை

சிறுத்தை (இடது) | சிவங்கிப் புலி (வலது)

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 70 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிவிங்கிப் புலிகள் இப்போது மீண்டும் வலம் வருகின்றன. நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் போயிங் 747 மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை காட்டில் விட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

சிறுத்தைக்கும், சிவிங்கிப் புலிகளும் வேறுபாடு என்ன என்பதே அந்தக் குழப்பம். சில விலங்குகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். ஆனால், அவை ஒரே விலங்கினமாக இருக்காது. கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் சின்ன சின்ன வேறுபாடுகளை உணரமுடியும். இது சிவிங்கிப் புலிகளுக்கும் பொருந்தும். சிறுத்தை (leopard) - சிவிங்கிப் புலி (cheetah) இரண்டும் பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். இரண்டுமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள். இரண்டின் பழக்கவழக்கங்களும் கிட்டத்தட்ட ஒத்துப்போகும். ஆனால், இரண்டும் வெவ்வேறு விலங்குகள். அவை:

சிவிங்கிப் புலி

  • மஞ்சள் கலந்த பழுப்பு நிற தோல் கொண்டவை.
  • உடம்பில் உள்ள புள்ளிகள் கறுப்பு நிறத்திலும் வட்ட வடிவிலும் இருக்கும்.
  • வட்ட முகம் கொண்டவை. இவற்றின் கண்களில் இருந்து வாய்ப்பகுதி வரை கண்ணீர்க் கோடு போன்ற கறுப்புக் கோடு இருக்கும்.
  • மெலிந்த உடலமைப்புடனும் நீண்ட கால்களுடனும் இருப்பவை.
  • ஓட்டத்தில் இவை சிறுத்தைகளைவிட வேகம் குறைவானவை.
  • பகலில்தான் இவை வேட்டையாடும். இவற்றின் பாதங்கள் உள்ளிழுக்கும் அமைப்பற்றவை. அதனால் மரங்களில் ஏற முடியாது.
  • பொதுவாக 80 பவுண்டு எடைக்கும் குறைவான பாலூட்டிகளை வேட்டையாடிச் சாப்பிடும். சிறு மான், ஆப்ரிக்கச் சிறு மான் போன்றவற்றை வேட்டையாடும். குழுவாக வேட்டையாடும்போது வரிக்குதிரை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடும்.
  • பொதுவாக 8 முதல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும். இவற்றின் குட்டிகள் அம்மாவிடம் 3 மாதங்கள் வரை மட்டுமே வளரும்.

சிறுத்தை

  • பெரும்பாலும் மஞ்சள் நிறத் தோல் கொண்டவை. இவற்றின் உடம்பிலும் கறுப்பு நிற வளையங்கள் இருக்கும். ஆனால் அவை முழு வட்ட வடிவில் இல்லாமல் ஆங்காங்கே உடைந்து இடைவெளியுடன் இருக்கும். வட்டத்தின் நடுவில் அடர்த்தியான பழுப்பு நிறம் இருக்கும்.
  • உறுதியான, படர்ந்த முகம் கொண்டவை.
  • உறுதியான, பருத்த உடலுடனும் குட்டையான கால்களுடனும் இருக்கும்.
  • மிக வேகமாக ஓடக்கூடியவை. சிறுத்தைகளை ஓட்டத்தில் மிஞ்சக்கூடிய விலங்குகள் இல்லை.
  • இரவில் வேட்டையாடும். சிவிங்கிப் புலிகளிடம் இன்னொரு வித்தியாச குணமும் உண்டு. இவை தாங்கள் வேட்டையாடிய இரையை மரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்று சாப்பிடும்.
  • இவற்றின் பாதங்கள் பூனையின் பாதங்களைப் போல உள்ளிழுக்கும் அமைப்பு கொண்டவை. அதனால்தான் மரங்களில் எளிதாக ஏற முடிகிறது.
  • இவற்றின் உணவுப் பட்டியல் பெரியது. பெரிய சாண வண்டுகளில் தொடங்கி எருது போலப் பெரியதாக இருக்கும் மான் போன்ற பெரிய விலங்குகள் வரை வேட்டையாடி உண்ணும். 12 முதல் 17 ஆண்டுகள் வரை வாழும். இவற்றின் குட்டிகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அம்மாவிடம் வளரும்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) தலைவர் எஸ்.பி.யாதவ் கூறும்போது, “வன விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களில் மறுமலர்ச்சி மற்றும் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

உலகில் மிக வேகமாக மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடிய விலங்கு சிறுத்தையாகும். இவற்றின் அழகிய வாழ்விடமாக குனோ தேசிய பூங்கா திகழும். விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக இந்தப் பூங்காவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சிறப்பான வகையில் செய்யப்பட்டுள்ளன. ரேடியோ காலர் பொருத்தி சிறுத்தைகளின் நடமாட்டம் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x