பார்வையை இழக்கும் குழந்தைகள்... உலகை சுற்றிக் காட்டும் பெற்றோர்... - ஒரு நெகிழ்ச்சிப் பயணம்

செபாஸ்டின் - எடித் இணையர் தங்களது குழந்தைகளுடன்.
செபாஸ்டின் - எடித் இணையர் தங்களது குழந்தைகளுடன்.
Updated on
1 min read

கனடாவை சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகள் வருங்காலத்தில் பார்வையை இழக்கலாம் என்பதை உணர்ந்து ஒரு நெகிழ்ச்சியான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

கனடாவை சேர்ந்தவர்கள் செபாஸ்டின் - எடித். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். இதில் மியா என்ற இவர்களது மகளுக்கு ரெட்டினிடிஸ் பின்மெண்டோசா நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோய் உள்ளவர்களுக்கு கண்ணின் பார்வைத் தன்மை மெள்ள மெள்ள பறிபோகும் அபாயம் உள்ளது. இந்த நோய்யை தீர்ப்பதற்கான மருத்துவம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதில், துயர் என்னவென்றால் மியா மட்டுமல்ல, மற்ற இரண்டு குழந்தைகளுக்கு ரெட்டினிடிஸ் நோயின் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் மூலம் செபாஸ்டினும் - எடித்தும் தெரிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தங்களது வாழ்வின் முக்கிய முடிவுக்கு இருவரும் தயாராகினர். தங்களது குழந்தைகள் பார்வை முழுவதுமாக இழப்பதற்குள் இந்த உலகை முழுவதும் சுற்றிகாட்டிட முடிவு செய்து, பிள்ளைகளுடன், பெட்டி படுக்கைகளை எடுத்து கிளம்பிவிட்டனர்.

இதுகுறித்து தாயார் எடித் கூறும்போது, “நான் என் பிள்ளைகளுக்கு புத்தகத்தில் இருக்கு யானைகளை காட்ட விரும்பவில்லை. அவர்களுக்கு உண்மையான யானையை காண்பிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு காட்சிகள் நிறைந்த நினைவுகளை அளிக்க விரும்புகிறேன்” என்றார். தந்தை செபாஸ்டின் கூறும்போது, “வாழ்வில் பயணத்தைவிட சிறந்தது இல்லை” என்றார்.

கரோனா காரணமாக சில காலம் தடைப்பட்ட அவர்களது பயணம் முழுவீச்சாக தற்போது நடந்து வருகிறது. தங்களது பயணத்தை சமூக வலைதளங்களில் ஆவணப்படமாக இந்த இணையர் பதிவேற்றி வருகிறது. இந்தப் பெற்றோரின் செயலுக்கு பல தரப்பிலும் ஆதரவுகள் பெருகி வருகின்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in