

தென் கொரிய காதலியை பெற்றோர் சம்மதத்துடன் ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டதாரி திருமணம் செய்துகொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக் குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் - செல்வராணி ஆகியோரின் மகன் பிரவீன் குமார் (33). இவர், ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்று தென்கொரியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
அங்கு, பூசான் மாகாணத்தைச் சேர்ந்த யங்ஊங்முன்-சங்ரிம்பாக் ஆகியோரின் மகள் சேங்வாமுன் (30) என்பவரை பிரவீன் குமார் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரவீன்குமார், சேங்வாமுன் திருமணம் நேற்று நடைபெற்றது.
இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க காதலி சேங்வாமுன் கழுத்தில் பிரவீன்குமார் தாலி கட்டினார். இதில், பங்கேற்றவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.