இந்தியாவில் சுகாதாரமான கழிவறையை பயன்படுத்துவோர் எத்தனை பேர்? - 2019-21 சர்வே முடிவுகள்

இந்தியாவில் சுகாதாரமான கழிவறையை பயன்படுத்துவோர் எத்தனை பேர்? - 2019-21 சர்வே முடிவுகள்
Updated on
1 min read

புதுடெல்லி: 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில் சுகாதாரமான கழிவறை வசதியை பெற்றுள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை தேசிய குடும்ப சுகாதார சர்வே முடிவுகளில் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 முதல் 2021 மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் மத வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுகாதாரமான கழிவறை பெற்றவர்களில் சமண சமயத்தை (ஜெயின்) சார்ந்தவர்கள் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் மக்களை தொகையில் இவர்களின் எண்ணிக்கை 0.4 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத வாரியாக சுகாதாரமான கழிவறை பெற்றுள்ளவர்களின் விகிதம்:

  • ஜெயின் - 97.6%
  • சீக்கியர்கள் - 97.5%
  • கிறிஸ்தவர்கள் - 91.2%
  • இஸ்லாமியர்கள் - 90.3%
  • பௌத்தர்கள் - 87.8%
  • இந்துக்கள் - 80.7%
  • இதர மக்கள் - 72.5%

இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்து மதத்தை சார்ந்தவர்கள். இவர்களில் 80.7 சதவீதம் பேர் தான் சுகாதாரமான கழிவறையை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in