Published : 16 Aug 2022 10:11 PM
Last Updated : 16 Aug 2022 10:11 PM

கர்நாடகா | வீதியில் புலி வேஷம் கட்டிய நபருடன் நடனமாடிய சிறுமி: நெட்டிசன்களின் இதயத்தை வென்றது

உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் புலி வேஷம் கட்டி வீதியில் நடனமாடிய நபருடன் சிறுமி ஒருவர் நடனமாடி அசத்தியுள்ளார். இப்போது அது இணையவெளியில் நெட்டிசன்களின் மனதை வென்றுள்ளது.

கடந்த 2021 நம்பரில் கன்னட மொழியில் வெளியான திரைப்படம் தான் ‘கருட கமன ரிஷப வாகன’. இந்த படம் கடலோர பகுதியான மங்களூரு மக்களின் வாழ்வியலை எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்திருந்தது. படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் புலி வேஷம் கட்டி ஆடும் நபர்களுக்கு என ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பார்கள். அது ஒருவிதமான வழிபாட்டு முறையாக பார்க்கப்படுவது போல இருக்கும். அந்த காட்சி மிகவும் மாஸாக இருக்கும்.

அந்த காட்சியை போலவே நிஜத்தில் கர்நாடக மாநிலத்தின் கடலோர பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் நவராத்திரி தசரா கொண்டாட்டத்தின் போது வீதிகளில் சிறு சிறு குழுவாக மக்கள் இணைந்து புலி வேஷம் கட்டி ஆடுவது வழக்கம் என தெரிகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் அங்குள்ள உடுப்பி நகரில் அண்மையில் அரங்கேறியுள்ளதாக தெரிகிறது.

அப்போது சிறுமி ஒருவர் புலி வேஷம் கட்டி ஆடிய நபருடன் இணைந்து வீதியில் நடனமாடி உள்ளார். இப்போது அந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

23 நொடிகள் டியூரேஷன் கொண்ட இந்த வீடியோவில் புலி வேஷம் கட்டி ஆடும் நபர் எடுத்து வைக்கும் நடன அசைவுகளை அப்படியே அச்சு பிசகாமல் ஆடி அசத்தியுள்ளார் அந்த சிறுமி. ‘சூப்பர் க்யூட்’ என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x