Published : 04 Aug 2022 07:58 PM
Last Updated : 04 Aug 2022 07:58 PM

பிராய்லர் சிக்கன் Vs நாட்டுக்கோழி சிக்கன் - மருத்துவர் தரும் குறிப்புகள்

“பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் பிரச்சினைகள் வருமா டாக்டர்?” - இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத மருத்துவரே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிராய்லர் கோழிக்கும், நாட்டுக் கோழிக்கும் இடையே உள்ள சிறு வேறுபாடுன்னா, கிட்டத்தட்ட நாட்டுத் தக்காளிக்கும், ஹைபிரிட் தக்காளிக்கும் இடையேயான வேறுபாடுதான் இதில் உள்ளது எனலாம்.

உண்மையில் வீட்டைச் சுற்றியுள்ள வெட்ட வெளியில் தானியங்களையும் மண்ணில் உள்ள புழுக்களையும் தானே தேடி உண்ணக்கூடியவை நாட்டுக்கோழிகள். இப்படி தினமும் அலைந்து பறந்து திரிவதால் நாட்டுக்கோழி இறைச்சியில் கொழுப்பு அளவு குறைந்தும், புரதத்தின் அளவு கூடியும் காணப்படுகிறது.

ஆனால், அதே தானியங்களையும் தீவனத்தையும் யாரோ ஒருவர் கொண்டுவந்து வைக்க, உட்கார்ந்த இடத்திலேயே உண்டுகொழிக்கும் பிராய்லர் கோழிகளில் புரதச்சத்து மட்டுமன்றி கொழுப்பின் அளவும் கூடிக் காணப்படுகிறது. மேலும், நாட்டுக்கோழியுடன் ஒப்பிடும்போது இதில் அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் சற்று குறைவாகவும் இருக்கிறது.

ஆக, அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்களும், புரதங்களும் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ள நாட்டுக்கோழியுடன் ஒப்பிடும்போது பிராய்லர் கோழியின் சத்து சற்று குறைவுதான். இருப்பினும், பிராய்லர் கோழியின் அதிகப்புரதச்சத்தையும் குறைந்த கார்போஹைட்ரேட்களையும் சரியான அளவில் சாப்பிடும்போது தீங்கொன்றும் இல்லை.

முந்திப் பருவமடையும் அச்சம்:

இரண்டு குற்றச்சாட்டுகள் பிராய்லர் சிக்கனின் மீது எப்போதும் சுமத்தப்படுகிறது. ஒன்று மருந்துகள் மற்றும் இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட செயற்கை உணவு பிராய்லர் கோழிக்கு வழங்கப்படுகிறது என்றும், இரண்டாவது ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டு இவை வளர்க்கப்படுகின்றன என்றும் நம்பப்படுகிறது. இதனால் பெண் குழந்தைகள் முந்திப் பருவமடைகிறார்கள் என்ற அச்சம் பரவலாக உள்ளது.

முந்திப் பருவமடைதலுக்கு மாறிவரும் நமது உணவுப் பழக்கங்கள் தான் முக்கியக் காரணமே தவிர கோழிக்கு ஹார்மோன்களோ, ஸ்டீராய்டுகளோ வழங்கப்படுவதால் அல்ல.

பிராய்லர் சிக்கனில் உள்ள அதிக புரதச்சத்தும் அதிகக் கொழுப்பும் பெண்களின் ஊட்டத்தை அதிகப்படுத்துமே தவிர பருவமடைதலை முந்த வைக்காது என்றே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த பிராய்லர் கோழி மற்றும் முந்திப் பருவமடைதல் குறித்த கேள்விகளை ஏனோ ஆண் பிள்ளைகளுக்காக யாரும் கேட்பதேயில்லை என்பதுதான் இங்கு நகைமுரண்.

> இது, கட்டுரையாளரும், மகப்பேறு மருத்துவருமான டாக்டர் சசித்ரா தாமோதரன் எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x