சட்டமாகிறதா வீட்டிலிருந்து வேலை?

சட்டமாகிறதா வீட்டிலிருந்து வேலை?
Updated on
1 min read

வீட்டிலிருந்து வேலை (WFH – Work From Home) முறைக்கு நம்மில் பலரும் இந்தக் கரோனாக் காலத்தில் பழகியிருப்போம். காலையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி அலுவலகம் போய்ச் சேர்வதிலிருந்து விலகி சற்றே ஆசுவாசத்துடன் இந்த வீட்டிலிருந்து வேலை என்ற வசதியை அனுபவித்திருப்போம். இணைய வசதி, மின்சாரப் பயன்பாடு, சம்பளக் குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு இந்த முறை பரவலாகப் பலராலும் விரும்பப்பட்டது எனலாம்.

கரோனாத் தொற்று வேகமாகப் பரவியதுபோது பல நிறுவனங்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்து வேலை என்னும் முறையை அறிவித்தன. அரசுகளும் கரோனாத் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வேலை முறையைப் பின்பற்ற நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டன.

அதன்படி பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை என்ற முறையை கிட்டதட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக நீட்டித்தன. இதனால் நிர்வாக ரீதியில் நிறுவனங்களுக்கு கரோனக் கால நஷ்டத்தைச் சமாளிக்க முடிந்தது எனலாம்.

தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் போன்ற துறைகளில் வீட்டிலிருந்து வேலை முறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த கரோனாக் காலத்தில் இது மிகவும் பிரபலம் அடைந்தது.

இந்நிலையில் வீட்டிலிருந்து வேலை என்னும் முறையை என்பது தொழிலாளர்களின் சட்ட உரிமையாக மாற்றுவதற்கான சட்ட மசோதா நெதர்லாந்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

ஐரோப்பியன் ப்ரோ டி-66 கட்சியின் உறுப்பினரான ஸ்டீவன் வான் வெயன்பெர்க் மற்றும் க்ரீன் பார்டி கட்சியின் உறுப்பினரான சென்னா மாடூக் ஆகியோரால் இந்தச் சட்ட மசோதா அறிமுகப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வெயன்பெர்க் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த ஜூலை 3 ஆம் தேதி இந்தச் சட்ட முன்வரைவைநாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஊழியர்கள் மற்றும் நிறுவன அதிபர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும் வீட்டிலிருந்து வேலை முறை சட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இது விரைவில் சட்டமாகும்" என்று வெயன்பெர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரானாக் கால ஊரடங்கு ஊழியர்களின் வேலை முறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. வீட்டிலிருந்து வேலை முறையைத் தொடர ஊழியர்கள் பலரும் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைத் திரும்ப அலுவலகத்து வர கட்டளையிட்டது. இந்நிலையில் இது ஊழியர்களில் இடையே ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் நெர்தர்லாந்து நிறைவேற்ற இந்தச் சட்டம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்று இறுதி எச்சரிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in