Published : 24 May 2022 11:47 AM
Last Updated : 24 May 2022 11:47 AM

முதுகுவலியால் தவித்த மனைவிக்காக ரூ.90 ஆயிரத்துக்கு பைக் வாங்கிய பிச்சைக்காரர்

தனது மனைவி முதுகுவலியால் தவித்து வந்ததால் பிச்சையெடுத்து சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு ரூ.90,000 மதிப்புள்ள மொபட் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சாஹூ என்ற நபர்.

ம.பி மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சாஹூ. இவருக்கு இடுப்புக்கு கீழ் சரியான செயல்பாடு இல்லை. இதனால் இவர் யாசம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு முன்னி என்ற மனைவி இருக்கிறார். இவர்களிடம் ஒரு தள்ளுவண்டி இருந்தது. அதில் தன் கணவரை அமர வைத்து முன்னி தள்ளிக் கொண்டு செல்ல, சிந்த்வாரா பகுதி கோயில்கள், மசூதிகள் அருகே யாசகம் பெற்று பிழைத்துவந்துள்ளனர்.

இந்நிலையில் வண்டியை தள்ளித் தள்ளி முன்னிக்கு முதுகுவலி வந்துவிட்டது. சாஹூவுக்கு இடுப்புக்கு கீழ் பிரச்சினை இருப்பதால் அந்தத் தள்ளுவண்டியை அவரால் பெடல் செய்ய இயலாது. இதனாலேயே முன்னி அவரை வைத்து தள்ளிக் கொண்டு செல்வார். இருவரும் சேர்ந்து அன்றாடம் ரூ.300 முதல் ரூ.400 வரை யாசகமாகப் பெறுகின்றனர்.

இந்நிலையில், முன்னிக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. மனைவியின் துயரைத் தாங்க முடியாத கணவர் சாஹூ யாசகம் பெற்று சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து 90,000 ரூபாய்க்கு ஒரு மொபட் வாங்கினார். இப்போது மனைவியை அதில் அழைத்துச் செல்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x