

பயணம் மிக நல்லது. நமக்குக் கற்பனாசக்தியையும் புதிய ஆற்றலையும் கொடுக்கும். மேலும் பயணம் மூலம் நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். பயணம் என்பது வெளியே செல்வது மட்டுமல்ல. நமக்கு உள்ளே பயணிப்பதும்தான். அப்படியான பயணத்துக்குச் செல்லலாம். இதை உங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான ஒரு பயணம். பரீட்சை என்றும் சொல்லலாம்.
கீழ்க்கண்ட வடிவத்தில் ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
சதுரத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்
நீங்கள் எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பீர்கள். உங்கள் வீட்டில் அலமாரிகள் சரியாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். படுக்கையறையில் விரிப்புகள் ஒழுங்கு கலையாமல் இருக்கும். உங்களுக்கு எடுத்தது எடுத்த இடத்தில் இருக்க வேண்டும். நீங்கள் கடினமான உழைப்பாளிகளாக இருப்பீர்கள். ஒரு காரியத்தை எடுத்தால் அதை உடனே முடித்துவிடுவீர்கள். முடிக்கும் வரை அந்தச் சிந்தனையிலேயே இருப்பீர்கள். நாளைக்குப் பார்க்கலாம், பிறகு பார்க்கலாம் எனத் தள்ளிப்போட மாட்டீர்கள். நல்ல நிர்வாகியாக இருப்பீர்கள். ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுவீர்கள்.
முக்கோணத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்
நீங்கள் தலைமைப் பண்பு உள்ளவர்களாக இருப்பீர்கள். தங்களுடைய முன்னேற்றத்தில் மிகுந்த கவனம் உடையவர்களாக இருப்பீர்கள். எல்லாம் உடனே நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் நீங்கள். ‘ஏன்?, ‘எப்படி’ என்பதற்குப் பதிலாக ‘எப்போது?’ எனக் கேட்கக்கூடியவராக இருப்பீர்கள். முடிவெடுக்க விரும்புபவர்களாக இருப்பீர்கள். தவறுகளை நியாயப்படுத்துபவர்களாக இருப்பீர்கள்.
செவ்வகத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்
நீங்கள் தைரியசாலியாக இருப்பீர்கள். ஆர்வம் உள்ளவராக இருப்பீர்கள். சண்டைச் சச்சரவுகளை விரும்பாதவர்கள். வாழ்க்கையைக் குறித்த குழப்பங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்கள் ஆளுமை எதிர்பார்க்க முடியாததாக இருக்கும். நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பீர்கள்.
வட்டத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்
நீங்கள் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக இருப்பீர்கள். நட்புகளை, சொந்தங்களை தொடர்பில் வைக்க விரும்புவீர்கள். அடுத்தவர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளக்கூடியவராக இருப்பீர்கள். குழுவுடன் சேர்ந்து செயல்படக்கூடியவர்களாக இருப்பீர்கள். அடுத்தவரின் பிரச்சினைகளில் அனுதாபப்படக்கூடியவர்களாக இருப்பீர்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் திறமையானவர் நீங்கள். மனத்தை வைத்து முடிவெடுப்பீர்கள்.
கோணல்மாணல் படத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்
நீங்கள் தனித்தன்மை உடையவராக இருப்பீர்கள். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவராக நீங்கள் இருப்பீர்கள். எல்லாச் செயல்களிலும் மாற்று வழியைப் பற்றிச் சிந்திப்பவர் நீங்கள். உருவாக்கப்பட்ட கோட்பாட்டுகளுக்கு வெளியே சிந்திப்பவராகவும் இருப்பீர்கள். மிகுந்த படைப்பாற்றல் உள்ளவராகவும் இருப்பீர்கள்.