குரூரர்களிடம் இருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? - Grooming | A to Z தெளிவுப் பார்வை

குரூரர்களிடம் இருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? - Grooming | A to Z தெளிவுப் பார்வை
Updated on
3 min read

இன்றைய நவீன உலகில் தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று தெரியாமலேயே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். படிப்பு தொடங்கி பொது பொருள்களுக்கான விளம்பரங்கள் வரை அனைத்திற்குமான இலக்குகளாக குழந்தைகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இது குழந்தைகளிடம் அவர்களின் வயதை மீறிய வளர்ச்சிப் போக்கையும், பெரியவர்களிடம் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்க மறுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று குற்றச்செய்திகளில் போக்சோ வழக்குச் செய்திகள் கணிசமான இடத்தை பிடித்திருப்பது இதற்கு சாட்சிகள்.

இந்தச் சூழ்நிலையில், நம்மில் எத்தனை பேர் க்ரூமிங் (Grooming) என்பது குறித்து அறிந்து வைத்திருக்கிறோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமது குழந்தைகள் முகம் தெரியாத ஒருவரின் கட்டளைகளுக்கு கீழ்பணிந்து பாதிக்கப்படும் அபாயம் க்ரூமரால் நிகழ்த்திக்காட்ட முடியும்.

க்ரூமிங் என்றால் என்ன, அது எவ்வாறெல்லாம் செல்படுகிறது, நாம் ஏன் அதுகுறித்து அதிக அக்கறை கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நீதித்துறைத் தவைவர் மிச்செல் மெக்மானஸ். ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது:

க்ரூமிங் என்றால் என்ன? - நாம் அனைவரும் "க்ரூமிங் " என்பதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். க்ரூமிங் என்பது இன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைக் குறிக்கும் வார்த்தையாக அர்த்தப்படுத்தப்படுகிறது. இதன் பாதிப்பிலிருந்து குழந்தைகளை காத்துக் கொள்வதற்கு முன்பாக, அந்த வார்த்தையின் அர்த்தம், எவ்வாறு அது செயல்படுகிறது என்பதைப் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கடந்த 1980-களில் அமெரிக்காவில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றங்கள் குறித்த விசாரணையின்போது "க்ரூமிங்" என்ற பதம் உருவாக்கப்பட்டதாக எஃப்பிஐ-யின் முன்னாள் அதிகாரி கென் லான்னிங்க் தெரிவிக்கிறார். இந்த ஆரம்ப கால விசாரணைகளில்,குழந்தைகளை க்ரூமர்கள் நெருக்க கடைபிடித்த நடைமுறைகள் வெளிப்பட்டன. இதன் மூலம், க்ரூமிங் எனப்படும் பாலியல் குற்றங்களை குழந்தைகளிடம் செயல்படுத்துபவர்கள் அந்நியர்கள் இல்லை. குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே என்பது உறுதியானது.

குழந்தைகளே இலக்கு: குழந்தைகளை எளிதில் அணுகி பழகுவதற்கு குழந்தைகளுக்கு க்ரூமர்கள் நெருக்கமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அனைத்து க்ரூமிங் செயல்பாடுகளும், சிறுவர்களுடன் விளையாடுதல், அவர்களுக்கு பரிசு பொருகளை வழங்குதல், குழந்தைகளுக்கு விருப்பமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லுதல் போன்ற பெரியவர்கள் - சிறுவர்களுக்கு இடையே நடக்கும் சாதாரண நடவடிக்கைகளில் இருந்து தான் தொடங்குகின்றன என்று குற்ற விசாரணைகள் தெரிவிக்கின்றன.மேலாட்டமாக பார்த்தால் மேலே சொன்ன நடவடிக்கைகளில் எந்தத் தவறும் இருப்பது போல் தெரியாது.

க்ரூமர் குற்றவாளிகள், குழந்தைகளுடன் பழகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். குழந்தைகளின் விருப்பங்கள், பலவீனங்களை முழுமையாக தெரிந்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் குழந்தைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை தங்களின் ஆளுமைக்கு கீழ் க்ரூமர்கள் கொண்டு வருகின்றனர். அதற்கு பிறகு குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த விஷயங்களை அறிமுகம் செய்து, அவர்களிடம் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இங்கே வாசகர்களுக்கு ஒரு கேள்வி வரலாம். குழந்தைகளை மிரட்டாமல், அவர்களிடம் வன்முறையை பயன்படுத்தாமல் ஒருவரால் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்க முடியுமா என்று அதிர்ச்சியும் அடையலாம். இதற்கு பதில் சொல்கிறது கென் லான்னிங்க் கூற்று. அவர் "விடாப்பிடியான முயற்சியுடன் செயல்படும் பாலியல் குற்றாவளிகள் தங்களின் இலக்கான குழந்தைகளிடம் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தி பின்னர் அவர்களை தங்கள் விருப்பப்படி தூண்டி விடுகின்றனர். அரிதாகவே வன்முறையை பயன்படுத்துகின்றனர்" என்கிறார்

க்ரூமிங் செயல்பாடு ஒருவரிடம் அவருக்கு நேர்ந்தவற்றை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு நீண்ட கால பாதிப்புகளை உருவாக்குகிறது. தங்களுக்கு விருப்பமே இல்லாத போதும், குறிப்பிட்ட ஒரு செயலுக்கு இணங்கிப் போகும் தன்மையை பாதிக்கப்பட்டவர்களிடம் அது உருவாக்குகிறது. விசாரணைகளின் போது க்ரூமிங்கினால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு நேர்ந்தது பற்றி புகாரளிப்பது குறித்த குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த குற்ற உணர்ச்சி க்ரூமிங் நடவடிக்கைகளை வெளிப்படுத்த தடையாக இருந்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக, பாதிக்கப்பட்ட பெரியவர்கள் இந்த அளவிற்கு குற்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை.

க்ரூமிங்கின் வகைகள்: க்ரூமிங் என்பது பாலியல், காதல், நிதி, குற்றம், தீவிரவாதம் ஆகியவைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இதன் இலக்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்களாகவும் இருக்கலாம். இவை அனைத்திலும் பொதுவான அம்சம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கை, நல்ல உறவை குற்றவாளி வளர்த்துக் கொண்டு அதன் மூலம் அவர்களை கட்டுப்படுத்துகிறார். வயது, பாலினம், உடல் வலிமை, பொருளாதார நிலை, பிற காரணிகளால் உறவுகளுக்குள் நிலவும் அதிகார மாற்றமே க்ரூமிங்கின் முக்கியமான அம்சமாகும்.

இன்றைய தொழில்நுட்பம், க்ரூமர்களுக்கு தங்களுடைய இலக்குகளை எளிதாக அடைவதற்கு புதிய வழிகளை திறந்து விட்டிருக்கிறது. பாலியல் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடுவதற்கு தற்போது டேட்டிங் அப், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்தி, பாலியல் உரையாடல்களுக்கு வழிநடத்தி சில சமயங்களில் படங்களை பரிமாறிக்கொள்ளவும் வழி செய்கிறது. குற்றவாளிகள், பாதிக்கப்படுபவர்களுக்கு ஆபாசப் படங்கள் போன்றவைகளை அனுப்பி, அவர்களை மிரட்டி வற்புறுத்தும் வழிமுறைகளை கையாளுகின்றனர்.

பணம் பறிக்கும் நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பொய்யான அடையாளத்துடன் நடக்கும் போலி காதல் உரையாடல் போன்றவையும் க்ரூமிங் வகையைச் சேர்ந்ததே. பயங்கரவாதம், தீவிரவாத நடவடிக்கைகளுக்காகவும் க்ரூமிங் நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு பல ஆதாரங்களும் உள்ளன.

துல்லியமான மொழி: "க்ரூமிங்" என்ற பதம் குறித்து இன்று அதிகமான விழிப்புணர்வு உருவாகியுள்ள அதே வேளையில் அந்த வார்த்தை அதிகமாக பிரபலமும் அடைந்துள்ளது. இருந்தபோதிலும் க்ரூமிங்கிற்கான சரியான வரையறை ஏற்றுக் கொள்வது, அதை எவ்வாறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பிற குற்றங்களுடன் தொடர்புபடுத்தும் கருத்தை உருவாக்குது என்பதிலும் பொதுக் கருத்தை எட்டுவதில் அறிஞர்களுக்கிடையில் பல சிக்கல் தொடர்ந்து வருகிறது. இந்த தெளிவின்மை க்ரூமிங்க் -ஐ தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது.

அமெரிக்காவில் க்ரூமிங் என்ற வார்த்தை அரசியல் ஆதாயத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. அங்கே வகுப்பறைகளில் பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் குறித்து விவாதிப்பது குறித்து விதிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தடையை ஆதரிப்பதற்காக மக்களுக்கு அழுத்தம் கொடுப்பது பற்றி பேசுகிறது, ஃப்ளோரிடா மாநில கவர்னர் ரான் டிசான்டிஸின் செய்தித் தொடர்பாளர் மார்ச் மாதம் தனது ட்விட்டர் செய்தியில், "இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள், ஒன்று க்ரூமராக இருக்க வேண்டும். இல்லையென்றால், 4-8 வயது குழந்தைகள் க்ரூமிங் செய்யப்படுவதை கண்டிக்காதவராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்ட ரோதிர்ஹாம், ரோச்டேல் குற்ற வழக்கின் காரணமாக மக்களிடம் ஏற்பட்ட கோபம் சட்டம், கலாசார ரீதிாயான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.

பொதுமக்கள் க்ரூமிங் என்பது குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்களையே பிரதானமாக குறிக்கிறது என்று நினைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் வேறு வகையாகவும் தங்களுக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு க்ரூமிங் செய்யப்பட்டிருப்பதை கண்டறிய அவர்கள் தவறி விடுகிறார்கள். இது இளம் வயதினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்கிறது. க்ரூமர்கள் பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்தும் அதே யுக்தியை தான், இளைஞர்களை குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த இளம் குற்றவாளிகள் க்ரூமிங் செய்யப்பட்டிருப்பதை அறியாமல் காவல்துறையினர் அவர்களை குற்றவாளிகளைப் போலவே நடத்துகின்றனர்.

க்ரூமிங்கை தடுப்பது எப்படி? - பொதுவாக அடிக்கடி பாலியல் சுரண்டல், கொடூரமாக பாதிப்புக்கு உள்ளானவர்களே க்ரூமர்களாக இருக்கிறார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனால், பாலியல் சுரண்டல் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு முன்பாக க்ரூமிங் நடவடிக்கைகளை அடையாளம் காண முடியாமல் போகிறது. க்ரூமிங் பற்றி பொதுமக்களிடம் அதிக விழிப்புணர்வை உருவாக்கும் போது, ஒரு சாதாரண உரையாடல் ரகசியங்களை பகிர்தல், தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக்கொள்ளுவது போன்ற க்ரூமிங் நடவடிக்கையாக மாறும்போது, பாதிக்கப்பட்டுவர்கள் அதுகுறித்த கவலைகளை தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியும்.

க்ரூம்ங் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவர்களின் இலக்குகளை குடும்பம், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். ஒருவர் க்ரூமிங்கால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்தால், முதலில் நாம் செய்ய வேண்டியது பொறுமையாக இருந்து தொடர்ந்து பாதிக்கப்படும் நபருக்கு ஆதரவாக அவருடன் நட்பு பாராட்டுவதுதான். இதனால், அவர் தாம் பாதிப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய அதிக காலம் எடுக்கலாம், இருந்த போதிலும் தொடர்ந்து அவருடன் நட்புடன் இருப்பது அவர் வெளிப்படையாக இருக்க உதவும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in