மன அழுத்தத்தை மறைக்காதீர்... நீங்கள் நிச்சயம் மிகவும் விரும்பப்படுவீர்! - புத்தெழுச்சி தரும் புதிய ஆய்வு

மன அழுத்தத்தை மறைக்காதீர்... நீங்கள் நிச்சயம் மிகவும் விரும்பப்படுவீர்! - புத்தெழுச்சி தரும் புதிய ஆய்வு
Updated on
2 min read

நம்மில் பலரும் மன அழுத்தத்தில் இருப்பதை மறைக்கிறோம். நாம் மன அழுத்தத்தில் இருப்பதை நம் சுற்றத்தார் அறிந்துகொண்டால், அவர்களுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுவோமோ என்ற அச்சமும் இதற்குக் காரணம். ஆனால், ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை அறியும்போது, அவரை வெறுக்காமல் விரும்பவே செய்வதுதான் மனித மனம் என்று பாசிட்டிவான புதிய ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. அந்த ஆய்வு குறித்தும், அதன் முடிவில் தெரிய வந்தவை பற்றியும் நாட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் ஆராய்ச்சியாளர் ஜேமி ஒயிட்ஹவுஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது...

னிதர்கள் எப்போதும் விசித்திரமாகவே நடந்து கொள்கிறார்கள்... நாம் எப்போது நமது பலவீனமான தருணங்களில்தான் நமது உள் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்...

மனிதர்கள் பலவீனங்களை மறைப்பது சிறந்தது என எண்ணுகிறோம். ஒருவரை சில மணி நேரம் ஆழமாக உற்று நோக்கி, அவர் வலியில் இருக்கிறாரா, விரக்தியில் இருக்கிறாரா என்பதை நம்மால் கூறிவிட முடிகிறதுதான். இந்த நிலையில் மனிதர்களின் உணர்வு குறித்த ஆய்வு ஒன்றை நாங்கள் நடத்தினோம். இந்த ஆராய்ச்சியில் நாங்கள் மனிதர்களின் முகங்கள், கை, கால்களை கவனித்தோம். இந்த ஆய்வின் முடிவில் எங்களுக்கு ஒன்று புரிந்தது... நீங்கள் எப்போதெல்லாம் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் மற்றவரால் விரும்பப்படுகிறீர்கள்.

ஆம்... மன அழுத்தம் - மனிதனின் பழக்கவழக்கங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை நாம் காலம் காலமாக புரிந்து வைத்துள்ளோம். நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, முகத்தைத் தொடுகிறோம், நகங்களைக் கடிக்கிறோம், தலைமுடியுடன் விளையாடுகிறோம். மன அழுத்தத்தின்போது நமது செயல்முறைகள் குரங்குகளுடன் ஒத்துப் போகின்றன. இம்மாதிரியான செயல்முறைகள் மனிதனுக்கும், குரங்குகளுக்கும் இடையே ஒரு பொதுவான மூதாதையரிடம் இருந்து பரிணாம வளர்ச்சியின் போது வெளிப்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

முந்தைய ஆய்வுகளும் அதனைத்தான் கூறுகின்றன. சரி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்து கொள்வார் என்பதை கண்டறிய நாங்கள் விரும்பினோம். இதற்காக ஆய்வுக்காக சில தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு லேசான அளவில் மன அழுத்தத்தைத் தூண்ட வேண்டும். இதற்காக நாங்கள் அவர்களை மூன்று நிமிடத்துக்கு முன்னர் ஒரு நேர்காணலுக்கு (போலி) தயாராகச் சொன்னோம். அதனைத் தொடர்ந்து கணிதத் தேர்வு இருந்தது. இதனால் பெரும்பாலான தன்னார்வலர்கள் மன அழுத்துக்கு உள்ளானர்கள். இது நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்காது.

தற்போது நாங்கள் இந்த தன்னார்வலர்களின் வீடியோவை ஒரு குழுவில் காண்பித்தோம். அந்த வீடியோவில் உள்ள நபர் எந்த அளவு மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று அந்த குழுவில் உள்ளவர்கள் அளவிட வேண்டும். இதுதான் அவர்களது பணி. இந்த ஆய்வின் மூலம் மன அழுத்தத்துக்கு உள்ளானால் மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும், அவர்களை பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்றும் நாங்கள் புரிந்துகொண்டோம்.

மேலும், ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை கண்டறிவதில் மனிதர்கள் சிறந்தவர்களாகவே உள்ளனர் என்பதும் எங்களுக்கு தெரிந்தது. இதிலிருந்து உங்களுக்கு நெருக்கமானவர்களால்தான் உங்களது மன அழுத்தத்தை உணரமுடியும் என்பதில்லை. முன் பின் அறியாதவரும் நீங்கள் மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்பதை உங்கள் செயல்பாடுகள் மூலம் அறிய முடியும். நாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது மற்றவர்களால் அதனை மிகத் தெளிவாகக் கண்டறிய முடியும் என்பதும் தெரிந்தது.

அதிக மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் சமூகத்தால் மிகவும் விரும்பத்தக்க நபர்களாகக் கருதப்படுகின்றனர் என்பது இந்த ஆய்வில் விளங்கியது. மேலும், மன அழுத்தம் காரணமாக நீங்கள் உருவாக்கும் சைகைகளை கண்டு யாரும் எதிர்மறையாக கருதுவதில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஆதலால் உங்களது பலவீனமான குணத்தை நீங்கள் காட்டுவது என்பது சமூகத்தில் ஆதரவையும், பிணைப்பையுமே ஏற்படுத்தும்.

மற்ற விலங்குகளைக் காட்டிலும் மனித இனம் ஒன்றுகொன்று இயைந்து செயல்படும் இனம். யாரெல்லாம் தங்களது எண்ணங்கள் குறித்து நேர்மையாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் பிற மனிதர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். நீங்கள் பலவீனமாக இருக்கும்போது பிறரை தொடர்புகொள்வதை விட நேர்மையான செயல் எதுவும் இல்லை.

மன அழுத்தம் உண்மையில் ஒரு நல்ல விஷயம்தான். அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுற்றுச்சூழலில் உள்ள சவால்களைச் சமாளிக்கவும் மனித மூளை வளர்ச்சியடைவதற்கும், உங்கள் மனதைத் தூண்டுவதற்கும் மன அழுத்தம் ஆரோக்கியமான சவாலே.

நல்லதோ கெட்டதோ உங்கள் உணர்வுகளைக் காட்டுங்கள். நேர்காணலின் போதோ, பெரிய நிகழ்ச்சிகளின்போதோ உங்கள் மன அழுத்தத்தை மறைக்க கடினமாக முயற்சிக்காதீர்கள். உங்கள் செயல்களின் மூலம் நேர்மையாகவும் இயல்பாகவும் நீங்கள் இருப்பது உண்மையில் மற்றவர்களுக்கு நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

உறுதுணை கட்டுரை: THE COVERSATION

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in