

ஒருவர் மின்னல் வேகத்தில் முட்டைக்கோஸை நறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. சுமார் 1.4 மில்லியன் வியூஸை இந்த வீடியோ கடந்துள்ளது.
இணையதளத்தில் திடீரென ஏதேனும் ஒன்று வைரலாகும். அதனை இது, அது என குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. அப்படியொரு வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. பேரண்டத்தின் மின்னல் வேக ஓட்டக்காரராக அறியப்படுபவர் உசைன் போல்ட். அவருக்கே சவால் கொடுக்கும் வகையில் ஒருவர் மின்னல் வேகத்தில் முட்டைக்கோஸை நறுக்கி தள்ளுகிறார். அந்த வீடியோவில் சுமார் 53 நொடிகளில் அவர் நூற்றுக்கணக்கான முட்டைக்கோஸை நறுக்குகிறார்.
இந்த வீடியோ தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஏனெனில், அந்த வீடியோவை ரெக்கார்டு செய்தவர்கள் தமிழில் பேசுகிறார்கள். அதனால் தமிழகத்தில் உள்ள பிரபல காய்கறி மண்டி அது எனத் தெரிகிறது. இதனை நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் உலகம் முழுவதும் ரெக்கார்டு செய்யப்படுகின்ற கவனம் ஈர்க்கிற வீடியோக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இதனை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை கவனித்த நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளை சொல்லி வருகின்றனர். "இதனால்தான் இந்தியாவில் ரோபோட்டிக் ஆட்டோமேஷன் தேவையில்லை என சொல்கிறோம்" என தெரிவித்துள்ளார் பயனர் ஒருவர்.