எல்லாம் பயம் மயமா?

எல்லாம் பயம் மயமா?
Updated on
2 min read


வாழ்க்கையின் முன்னேற்றத்துக்குப் பயங்கள் தடையாக இருக்கும். வெற்றிபெற வேண்டும் என முயன்றும் அதை கிடைக்காமல் நழுவிப் போவதற்கான காரணம், இந்தப் பயங்கள். ‘தெனாலி’ படத்தில் கமல் ஹாசன் ‘எல்லா பயம் மயம்’ என்று சொல்வரே அதுபோல் எல்லாவற்றுக்கும் பயப்பட்டால் வெற்றி எட்டாக் கனியாகும்.

வாழ்க்கை முன்னேற்றத்துக்கு எம்மாதிரியான பயங்கள் தடையாக இருக்கும் என இப்போது பார்ப்போம். இம்மாதிரிப் பயங்கள் இருக்கும் பட்சத்தில் அதைக் கண்டுணர்ந்து அதைக் கடக்க வேண்டும். பயத்தை எதிர்கொள்ளாமல் வெற்றி இல்லை.

நிராகரிக்கப்படுவதால் வரும் பயத்தால் நம்மில் பலரும் கலங்கிப் போய்விடுகிறோம். அதனால் மற்றுள்ளவரால் நிராகரிக்கப்படும்போது துவண்டு முடங்கிப் போகிறோம். உதாரணமாக உங்கள் ஒரு திட்டம் உயர் அதிகாரியால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் நீங்களே அவரால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக நினைத்து அந்தத் திட்டத்துக்குச் செயல் வடிவம் கொடுக்காமலேயே இருப்பது சரில்லை. ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் தோல்வி பயத்தைவிட அதனால் வீட்டார் தன்னை நிராகரிப்பார்களோ என்ற பயம்தான் சிலருக்கு அதிகமாக இருக்கும்.

நிச்சயமின்மையைக் குறித்த பயம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. இந்த நிச்சயத்தன்மையால்தான் அரசு வேலைக்கு நாம் ஆசைப்படுகிறோம். குறைவாக இருந்தாலும் நிச்சயமான சூழல் இருப்பதால் அம்மாதிரியான வேலையை விரும்புகிறோம். புதிய சிந்தனைகள் பலவும் இம்மாதிரியான மாறிக்கொண்டிருக்கும் சூழலில்தான் உருவாகும்.

மாற்றத்துடனான பயமும் இதே போல் நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை. பல்லாண்டுக் காலம் பழக்கப்பட்ட ஒரு பணிச் சூழல், வாழ்விடம் போன்றவற்றில் இருந்து புதிய சூழலுக்கு மாறா ஒரு பயம் வரும். செளகர்யமான சூழலில் இருப்பதால் வரும் பயம். புதிய விஷயங்கள் எல்லாவற்றின் மீதும் பயம் இருக்கும். சமையல் எரிவாயு பயன்படுத்த பலருக்கும் தொடக்கக் காலத்தில் பயம் இருந்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புதிய மாற்றத்தை எதிர்கொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான பயம், மற்றுள்ளவர்களிடம் இல்லாதது தனக்கு இல்லை என்ற பயம். சமூக ஊடகங்களில் பகிர்வுகள் அதிகமாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தப் பயம் அதிகமாக இருக்கிறது. என்னிடத்தில் கார் இருக்கிறது என ஒருவர் சொல்லும்போது தன்னிடம் இல்லை என்ற உணர்வு, தன் வாழ்க்கை குறித்த பயமாக மாறுகிறது.

பிறகு தாழ்வு மனப்பான்மை குறித்த பயமும் பலருக்கும் உண்டு. தன்னால் இதைச் செய்ய முடியாது. தனக்கு அந்தத் திறமை எனத் தாழ்வு மனப்பான்மையால் பல காரியங்களையும் செய்யாமல் இருப்போம். இந்தப் பயமும் வெற்றிக்கு வினையாகும் அம்சம்.

எல்லோரும் ஒன்றாக இருக்கும் இந்த உலகில் தான் மட்டும் தனியாக இருப்பதாகப் பயம் கொள்வதும் மிக ஆபத்தானது. தற்கொலை முடிவுகளுக்கு இந்தப் பயம் தள்ளிவிடும்.

உங்களுக்கு வரும் இந்தப் பயங்களை பட்டியலிடுங்கள். அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் ஆலோசியுங்கள். உங்கள் பயங்கள் பற்றி வெளிப்படுத்துங்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களிடமோ குடும்பத்தாரிடமோ சொல்லுங்கள். பிறகு அதை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். வானம் வசப்படும்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in