உதகை தாவரவியல் பூங்காவை 2 நாட்களில் 60,000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

உதகை தாவரவியல் பூங்காவை 2 நாட்களில் 60,000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
Updated on
1 min read

உதகை: உதகை தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் 60 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி வரும், 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மலர் கண்காட்சிக்காக பூங்காவில், 270 ரகங்களில் 5.5 லட்சம் மலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

நடப்பாண்டின் சிறப்பம்சமாக, ‘இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பிகோனியா, செம்பர், புளோரன்ஸ் உட்பட 270-க்கும் மேற்பட்ட ரகங்களைச் சேர்ந்த மலர்கள் பார்வைக்கு விருந்து படைக்க உள்ளன.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக பூங்காவில் உள்ள மலர் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர். உதகை தாவரவியல் பூங்காவை கடந்த 2 நாட்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.

உதகை ரோஜா பூங்காவில், ‘ஹைபிரீட் டீ, புளோரிபண்டா, மினியேச்சர், பாலியந்தா, கிரீப்பர்ஸ்' உட்பட 4,000 ரோஜா இனங்களிலிருந்து, 40 ஆயிரம் செடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில், உதகை ரோஜா பூங்காவை, 80 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது சாதாரண நாட்களில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் இந்த பூங்காவில் 17-வது ரோஜா காட்சி நடக்கிறது.இதற்கான ஆயத்தப் பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in