

கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் உடல் வலுவிழக்கும். இந்தத் தட்பவெப்பநிலை மாற்றம் உடலில் வாயு, பித்தம், கப அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் உடலின் சமநிலை மாறி நோய்கள், உபாதைகள் ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் அதிகரித்த கபம், இப்போது உலர்ந்து போகும். அந்த இடத்தை வாதத் தோஷம் ஆக்கிரமிக்கும். கோடை காலத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பித்தத் தோஷம் அதிகரிக்கும். பொதுவாகப் பசியைத் தூண்டிச் செரிமானத்தைச் சீராக்குவதில் பித்தம் நேரடியாகத் தொடர்புடையது.
கோடை காலத்தில் சீரான செரிமானமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆயுர்வேத மருத்துவத்தில் செரிமானத்துக்குக் காரணமாக இருக்கும் அக்னி, ஆரோக்கியமான உடலுக்கு முதன்மையானது எனக் கூறப்படுகிறது. வெப்பநிலை அதிகரிக்கும்போது செரிமானச் சக்தி குறையும். இதனால் பல நேரங்களில் மந்தமாக இருக்கும். இதனாலேயே பித்தத்தைச் சமச்சீராக வைத்திருக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஓரளவு உணவு, அதிக அளவில் தண்ணீர் அருந்துவதன் மூலம் நீரிழப்பு ஏற்படாமல் பராமரிக்கலாம்.
அதேநேரத்தில், கோடை கால உணவுமுறையில் தவிர்க்க வேண்டியவற்றையும் டாக்டர் எஸ்.ஆர்.யாழினி அடுக்குகிறார். அதன் விவரம்:
# தட்பவெப்ப நிலை மாறியவுடனேயே உடலின் செயல்பாடுகளுக்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
# உப்பு, புளிப்பு, மசாலா உணவு வகைகள்.
# எண்ணெயில் பொரித்த உணவு வகைகள்.
# ஐஸ், குளிர்பானங்கள்.
# குளிர்ந்த நீர்கூடச் செரிமானத்தைப் பாதிக்கும்.
# சமைத்த உணவை இரண்டு மணி நேரத்துக்குள் சாப்பிடவும். ஆறிய, பழைய உணவைச் சாப்பிடக் கூடாது.
# மதுபானத்தை அறவே தவிர்க்கவும்.
# உடலில் அதிக வெப்பம் படுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கடுமையாக வெயில் அடிக்கும்போது வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
# மிகக் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்