Published : 03 May 2022 04:18 PM
Last Updated : 03 May 2022 04:18 PM

உளவியல் நிபுணர்களுக்கு மனநல பாதிப்பு வந்தால்..? - ஒரு விரைவுப் பார்வை

பொது மருத்துவர் ஒருவர் தனது நோயாளிகளைப் போல தானும் நோய் பாதிப்புக்குள்ளாவது சாதாரணமான ஒன்று. மருத்துவராக இருந்தாலும் அவரும் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. அப்படி பாதிப்புக்குள்ளாகும்போது அம்மருத்துவர்கள் தயங்காமல் பாதிப்பை வெளிப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். இந்த வாய்ப்பு எல்லா வகையான மருத்துவர்களுக்கும் எளிதாக கிடைப்பதில்லை. குறிப்பாக, உளவியல் மருத்துவர் ஒருவர் தனது மனநல பாதிப்புகளை வெளிப்படையாக வெளியில் சொல்ல முடியுமா? உளவியலாளர் ஒருவர் மனநல பாதிப்புக்குள்ளாகும்போது அவர் என்ன செய்வார்? - இந்த மில்லியன் டாலர் கேள்விக்கான பதில், 'அவர் மவுனமாக இருந்து விடுவார்' என்பதே!

காரணம், மிகவும் எளிதானது. உளவியலாளர் ஒருவர் தனது மனநல பாதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசும்போது, அவரது பணி எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது பொதுக் கருத்தாக உள்ளது. ஆனால், உளவியளார்கள் சொந்த மனநல பாதிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுவது, இந்த மூடநம்பிக்கையைக் குறைக்கவும், மற்றவர்கள் பயன் பெறவும் உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதற்கு முன்பு உளவியலாளர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்பாடுமா என்ற கேள்வி எழும். உளவியலாளர்களும் மனிதர்கள்தான் அவர்களும் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று 'தி கான்வெர்சேஷன்' தளத்தில் விவரித்திருக்கிறார்கள், தென் புளோரிடா பல்கலைக்கழகத்தில், மருத்துவ உளவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆண்ட்ரூ டெவெண்டோர்ஃப், டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியல் உதவிப் பேராசிரியர் சாரா விக்டர்.

இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 1,700 உளவியல் ஆசிரியர்கள், பயிற்சியாளர்களிடம் மனநல பாதிப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர். அவர்களிடம், எப்போதாவது மனநல பாதிப்புகளை அனுபவித்திருக்கிறார்களா? மனநோய் பாதிப்புக்காக தொழில்முறை மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்திருக்கிறார்களா? - இந்த இரண்டு கேள்விகள் தனித்தனியாக கேட்டுள்ளனர். பங்கேற்பாளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு கட்டத்தில் தங்களுக்கு மனநல பாதிப்புகள் இருந்ததாகவும், 48 சதவீதம் பேர் தங்களுக்கு மனநல பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அப்படி இருந்தும் உளவியலாளர்கள் தங்களின் பாதிப்புகளைப் பற்றி வெளிப்படையாக பேச ஏன் தயங்குகின்றனர்?

தங்களின் மனநல பிரச்சினை அனுபவங்களை வெளிப்படையாக பேச முடிவெடுத்த உளவியலாளர்கள், இந்த மனநலப் பிரச்சினையை பற்றி வெளிப்படையாக பேசினால் தங்களின் நிலையை நல்ல வழியில் பயன்படுத்த முடியும் என்றும், அது அவர்களைப் போலுள்ள பிற உளவியலாளர்களுக்கும் உதவும் என்றும் ஆண்ட்ரூ டெவெண்டோர்ஃப், சாரா விக்டர் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x