தடுப்பூசியால் முடிவுக்கு வந்த 4 பெருந்தொற்றுகள்: ஒரு சிறப்புப் பார்வை

தடுப்பூசியால் முடிவுக்கு வந்த 4 பெருந்தொற்றுகள்: ஒரு சிறப்புப் பார்வை
Updated on
2 min read

உலகம் முழுவதும் ஏற்படும் பெருந்தொற்றுகளைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகளின் முதல் ஆயுதமாக உள்ளது தடுப்பூசிகள்தான். பிறந்த குழந்தைகள் முதல் 100 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை தருகிறது. தடுப்பூசியால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தத் தடுப்பூசிகளின் முக்கியதுவத்தை மக்களுக்க எடுத்து கூறி வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலகத் தடுப்பூசி வாரத்தை உலக சுகாதார நிறுவனம் கடைபிடித்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தேதி முதல் 30-ம் தேதி இந்தத் தடுப்பூசி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தடுப்பூசி வார நிகழ்ச்சிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. அனைவரும் நீண்ட வாழ்நாள் என்பதை அடிப்படையாக இந்த தடுப்பூசி கொண்டாப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்றால் உலகமே முடங்கிக் கிடந்த நிலையில், தடுப்பூசியால் மட்டும் மனித குலம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதைப்போன்று தடுப்பூசியால் முடிவுக்கு வந்த 4 பெருந்தொற்றுகளின் கதை இது...

சின்னம்மை: மனித குலத்தை அச்சுறுத்திய மிகப் பெரிய பெருந்தொற்றுகளில் முக்கியமானது சின்னம்மை. சின்னம்மை தடுப்பூசி முதல் 1786 ஆம் ஆண்டு எர்வர்டு ஜென்னர் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து 1796-ஆம் ஆண்டு ஜேம்ஸ் என்ற சிறுவனுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 80 ஆண்டுகள் கழித்து 1980-ம் ஆண்டுதான் சின்னம்மை நோய் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்கு, இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி செலுத்தாத 300 மில்லியன் மக்கள் சின்னம்மை நோயால் மரணம் அடைந்து இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

போலியோ: போலியோ நோய் பற்றி தெரியாத மக்களே இல்லை என்று கூறலாம். இன்றைக்கு ஆண்டுக்கு 2 முறை போலியோ சொட்டு செலுத்தப்படுகிறது. 5 வயது வரை குழந்தைகளை பாதிக்கும் போலியோ நோய்க்கு 1988-ஆம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் போலியோ நோய் பாதிப்பு 99 சதவீதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசியால் 1.5 மில்லியன் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

தட்டம்மை: பிறந்த குழந்தைகளுக்கு தட்டம்மை, கக்குவான் இருமல், டயரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர். இதைத் தடுக்க குழந்தைள் பிறந்தது முதல் 12 வயது வரை பல்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. குறிப்பாக பிசிஜி, எம்எம்ஆர், ஐவிபி, பெண்டா உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசிகளால் குழந்தைகளின் இறப்பு விகிதம் பெரிய அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா: நம்முடன் தொடர்ந்து பயணிக்க உள்ள கரோனா தொற்று குறைந்தது வருவதற்கு தடுப்பூசிதான் முக்கிய காரணம். கரோனா தொற்று டிசம்பர் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அடுத்த ஓராண்டு காலத்தில், அதாவது டிசம்பர் 2020ம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பல்வேறு நாடுகள் செய்து வருகிறது. கரோனா மீண்டும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறி வந்தாலும் இறப்புகளை குறைப்பத்தில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்துள்ளது.

இப்படி தடுப்பூசியால் தடுக்கப்பட்ட பெருந்தொற்றுகள் இருந்தாலும் பலர் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த போது கூட பலர் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், அந்தத் தடுப்பூசியால்தான் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கைளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியு நிலையில், முறையான அறிவியல் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் மனித குலத்திற்கு பெரிய கொடை என்றுதான் கூற வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in