குடும்ப அத்துமீறல்: பெற்றோரால் ஆயுதமாக்கப்படும் குழந்தைகளும் 5 பாதிப்புகளும்

குடும்ப அத்துமீறல்: பெற்றோரால் ஆயுதமாக்கப்படும் குழந்தைகளும் 5 பாதிப்புகளும்
Updated on
3 min read

'குடும்ப வன்முறை' என்பதை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அது என்ன 'குடும்ப அத்துமீறல்?'. யார் யாரிடம் அத்துமீறுகிறார்கள். குடும்ப அத்துமீறல் என்பது, பெற்றோரில் ஒருவர் தங்களின் குழந்தையை மற்றவருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தவதை உள்ளடக்கியது. இது குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கும் என்கிறார் கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின், சமூகப் பயன்பாடு மற்றும் உளவியல் நலத்துறை இணைப் போரசிரியர் 'ஜெனிஃபர் ஹர்மன்'. இந்த குடும்ப அத்துமீறல் எவ்வாறெல்லாம் செயல்படுகிறது. அதன் பாதிப்புகள் என்னென்ன என்பதை தனது ஆராய்ச்சி தெளிவுப்படுத்துவதாக கூறும் 'ஜெனிஃபர் ஹர்மன்' அது குறித்து 'தி கான்வெர்சேஷன்' இணையதளத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ன்றைய மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் பெற்றோர் தங்களுக்குள் இருக்கும் வன்முறை, சகிப்பின்மை போன்றவற்றை குழந்தைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தி தீர்த்துக் கொள்ள முயல்வது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. இதில் தாய், தந்தை இருவரும் மற்றவர்களை பழிவாங்கவும், காயப்படுத்தவும் குழந்தைகளையே பயன்படுத்துகின்றனர். அத்துமீறும் பெற்றோரை உளவுபார்க்கும் படி குழந்தைகளுக்கு நேரடியாக அழுத்தம் கொடுப்பது, அத்துமீறலில் ஈடுபடுவர்கள் திருமண உறவை விட்டு வெளியேறினால் குழந்தையை நிரந்தரமாக பார்க்க முடியாது என மிரட்டுவது போன்றவை அடங்கும்.

பெற்றோர் மற்றவர்களை பழிவாங்க குழந்தைகளே சிறந்த வழி என்று நம்புகின்றனர். அதனால் குழந்தையை மற்றவர்களுக்கு எதிராக திருப்பும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். குடும்ப அத்துமீறலில் ஈடுபடுபவர் மற்ற பெற்றோர் குழந்தையை நேசிக்கவில்லை, அவர்களுக்கு குழந்தைகள் மீது பாசம் இல்லை, அவர்கள் அருகில் இருந்தால் அது குழந்தைக்கு ஆபத்து என்று நம்ப வைக்கிறார்கள்.இதன் மூலம் அவர்கள் குழந்தையின் யதார்த்தத்தை சிதைக்கிறார்கள்.

என்னைப்போன்ற உளவியலாளர்கள் இதனை "பெற்றோரை அந்நியப்படுத்துதல்" என்று அழைக்கிறோம். அந்நியப்படுத்தப்பட்ட பெற்றோர் மீது குழந்தை அதிக காயம், துரோகம், கோபமாக உணர்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனெனில், இது குழந்தைக்கு மிகவும் நெருக்கமான, அவர்களின் அடையாளத்தில் பாதியை கொண்டிருக்கும் பெற்றோரையும் உள்ளடக்கிய ஒன்று. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குழந்தைகள் தொடர்ச்சியாக அடையப்போகும் பாதிப்புகள் அதிகம்

1. தன்னம்பிக்கையை இழக்கிறது: குடும்ப அத்துமீறல் நிகழும் போது உளவியல் துறை ஆய்வாளர்கள் அதனை "குழந்தையை ஆயுதமாக்குதல்" என்றழைக்கின்றனர். அத்துமீறி நடக்கும் பெற்றோர் மீது குழந்தை தனது சொந்த நினைவு மற்றும் அனுபவத்தின் மீதான நம்பிக்கையை இழக்கிறது. அத்துமீறும் பெற்றோர் அவர்களை நம்புவதற்கு முரணாக அது இருக்கிறது. பெற்றோரிடமிருந்து அந்நியப்பட்டிருந்த பல பெரியவர்கள், தாங்கள் குழந்தைகளாக இருந்த போது உதவியற்றவர்களாக உணர்ந்ததாகவும், உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாமல், பிறரை நம்ப முடியாதவர்களாக இருந்ததாக தெரிவிக்கின்றர்.

2. குழந்தைத்தனத்தை இழக்கின்றனர்: அத்துமீறலில் ஈடுபடும் பெற்றோர், குழந்தைகளிடம் அவர்களின் வயதிற்கு மீறிய அல்லது நடைமுறைக்கு பொருந்தாத விசயங்களை திணிப்பதன் மூலமாக குழந்கைளின் அப்பாவித்தனத்தை அழிக்கின்றனர். அத்துமீறலில் ஈடுபடும் பெற்றோர், குழந்தைகளை பெரியவர்கள் போல முடிவெடுக்க கட்டாயப்படுத்தலாம். அதேநேரத்தில் குழந்தையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மறுப்பது, குழந்தையின் தேவைகளை பெரியவர்களின் பார்வையில் இருந்து தீர்மானிப்பது போன்ற செயல்களின் ஈடுபடலாம்.

3. பெற்றோரின் தொடர்பை இழக்கின்றனர்: ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து அந்நியப்படுத்தப்படுத்தப்படும் போது, கோபம் மற்றும காயம் காரணமாக அவர்கள் தங்களின் பாதி அடையாளத்தை நிராகரிக்கத் தொடங்குகிறார்கள். அந்த உறவை ஒத்துக்கொள்வதும் குழந்தைகளுக்கு மிகவும் வலி நிறைந்ததாக இருக்கிறது. இதனால் அத்துமீறலில் ஈடுபடும் பெற்றோர் வழங்கிவரும் பந்தத்தையும் குழந்தை நிராகரிக்கிறது. இந்த உறவு இழப்பு பகிரப்பட்ட அடையாளம் போன்றவை, நிரந்தரமான துக்கம் மற்றும் அதிக தாழ்வு மனப்பான்மை போன்ற நீண்ட மற்றும் குறுகிய கால எதிர்மறை விளைவுகளை குழந்தைகளிடம் ஏற்படுத்துகின்றன.

4. குடும்ப பந்தங்களை இழக்கின்றனர்: குடும்ப அத்துமீறல் காரணமாக ஒரு பெற்றோரிடமிருந்து பிரிந்து இருக்கும் குழந்தை ஒரு பரந்துபட்ட குடும்ப பந்தம் மற்றும் சமூகஉறவுகளை இழக்கிறது. இந்தத் தொடர்புடைய குடும்ப நபர்கள் வழங்கக்கூடிய சமூக ஆதரவு, அவகளின் சமூகத் தொடப்புகள் மூலமாக சாத்தியப்படும் அனுபவங்கள், வாய்ப்புகளை குழந்தை இழக்க நேரிடுகிறது.

5. சமூக தொடர்பை இழக்கின்றனர்: அத்துமீறல் செயல்களில் ஈடுபடும் சில பெற்றோர், குழந்தைகளை போர்டிங் பள்ளியில் சேர்ப்பது, அவர்களுடைய நட்பு வட்டாரங்களை சுருக்குவது போன்ற செயல்களின் மூலமாக குழந்தைகளை தனிமைப்படுத்தும் செயல்களைச் செய்கின்றனர். அப்படி நடக்கும் போது, குழந்தை தனது முந்தைய சமூக உறவு, கல்வி, நட்பு, பொழுதுபோக்கு கலாச்சாரம் போன்ற அனைத்து தொடர்புகளையும் இழக்கிறது. அந்நியப்படுத்தப்பட்ட பெற்றோரின் இழப்பை வெளிப்படுத்தமுடியாமல் குழந்தைகள் பெரும்பாலும் தனிமையில் அவதிப்படுகின்றனர்.

நாம் என்ன செய்யவேண்டும்? - குழந்தைகள் ஆயுதங்களாக பயன்படுத்தப்படும் சூழல், அந்தக் குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு குழப்பமாக இருக்கலாம். உண்மையில் என்ன நடக்கிறது என்பது தலைகீழாகவும் தோன்றலாம். அத்துமீறலில் ஈடுபடும் பெற்றோரின் செயல்களை அடையாளம் காணமுடியாமல் போகலாம், குற்றம்சாட்டப்பட்ட பெற்றோருக்கு உண்மையில் அக்கறை இல்லை, அவர்களிடம் தான் தவறு இருக்கிறது என்று கூட தோன்றலாம்.

ஆனால், உண்மையில் இந்த நெருங்கிய உறவினர்கள் தான் இந்த குடும்ப வன்முறையை உடைத்து குழந்தையை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியும். அந்த குடும்ப அத்துமீறல் நடவடிக்கைக்காக தவறான ஆளை அவர்கள் குற்றம் சாட்டும் போது குழந்தை தொடர்ந்து துன்பப்படும் சூழலே தொடரும். மனநல நிபுணர்கள் கூட எல்லா நேரங்களிலும் நிலைமையை சரியாக மதிப்பீடு செய்து, குழந்தைக்கு அத்துமீறும் செயலில் ஈடுபடும் பெற்றோருடனான உறவில் கவனம் செலுத்துவதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்கள் பெண்கள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் குழந்தைகளை மற்ற பெற்றோருக்கு எதிரான ஆயுதமாக மாற்றுவதில் ஆண் பெண் வித்தியாசங்கள் அதிகம் இல்லை என்று எனது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்தும் போக்கு மாற வேண்டும். இல்லையெனில் பல உறவுகள் பாதிக்கப்பட்டு குடும்பங்கள் உடையும் நிலை அதிகரித்துக் கொண்டே போகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in