Last Updated : 26 Apr, 2022 05:32 PM

 

Published : 26 Apr 2022 05:32 PM
Last Updated : 26 Apr 2022 05:32 PM

கோடை ஸ்பெஷல் | குடலுக்கு உகந்த பழைய சோறு: செய்முறையும் சாப்பிடும் முறையும் - ஓர் எளிய வழிகாட்டுதல்

"நம் அன்றாட உணவுமுறையில் மிகவும் அவசியமான உணவாக பழைய சோறு இருக்க வேண்டும். எல்லா காலநிலைக்கும் பொருந்தும் உணவு இது. குறிப்பாக, வெயில் காலத்தில் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால், பழைய சோறு எப்படி செய்ய வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என தெரிந்துகொண்டு சாப்பிட்டால்தான் அதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்” என்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி. அவர் மேலும் பகிர்ந்த பயனுள்ள தகவல்கள்:

பழைய சோறு எப்படி செய்ய வேண்டும்? - "பழைய சோறு செய்வது ன்பது என்ன கடினமா என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதில் சில நுணுக்கங்கள் உள்ளன. காலையில் செய்த சாப்படு அல்லது மாலை சமைத்த சாப்பாடு என எது வீட்டில் மீதமாகிறதோ, அதை ஓர் இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். நம்மில் பலர் செய்யும் தவறு என்னவென்றால், அடுத்த நாள் காலை தயாரான பழைய சோற்றில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு பழைய சாதத்துடன் தண்ணீர் சேர்த்து சாப்பிடுவது. இப்படி சாப்பிடுவதால் எந்தப் பயனும் இல்லை. இரவு முழுவதும் ஊறிய தண்ணீரில்தான் சத்துக்குள் உள்ளன. எனவே, ஊற வைத்த அதே தண்ணீருடம் சாதத்தை சின்ன வெங்காயம் வைத்து சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளின் பெரிய கேள்வி: 'நாங்கள் பழைய சோறு சாப்பிடலாமா?' - தாராளமாக சாப்பிடலாம். உங்களை மருத்துவர் இரண்டு இட்லிதான் சாப்பிட சொல்லியிருந்தால், அதே அளவுக்கு நீங்கள் பழைய சோறு எடுத்துக்கொள்ளலாம். இல்லை எனில், அரிசியை விட கம்பு, கேழ்வரகு, திணை அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை எப்படி அரிசி கொண்டு சமைத்து பழைய சாதம் தயாரிப்போமோ, அப்படியே செய்ய வேண்டும். இதனுடன் புளித்த மோர் கலந்து சாப்பிடலாம். இதில், ரெசிஸ்டன்ஸ் ஸ்டார்ச் அதிகம் இருக்கும். ’பி’ வைட்டமின் அதிகமா உள்ளது. இதில் நல்ல கிருமிகள் அதிகமாக உள்ளதால் எளிதில் செரிமானம் ஆவதற்கான உணவுதான் பழைய சோறு.

முக்கியமாக இரவு ஊற வைக்கும் பொழுது வெளியில் வைக்க வேண்டும். ஆனால் பலர் செய்யும் தவறு, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விடுகிறார்கள். இரவு முழுவதும் வைக்க வேண்டாம். வேண்டுமாலும் சாப்பிடுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

குளிர்பானங்களை தவிர்த்து, வீட்டில் பானம் செய்யுங்கள்: வெயில் நேரத்திற்கு குளிர்பானங்கள் குடித்தால் நன்றாக இருப்பது போல் தோன்றலாம். உண்மை என்னவெனில், அதனால் எந்தப் பயனும் இல்லை. உடலில் சர்க்கரைதான் அதிகமாகும். வெறும் எலுமிச்சையைப் பிழிந்து சிறிய அளவு உப்பு, சேர்த்துக் குடியுங்கள். வெயிலுக்கு மிகவும் நல்லது. மண்பானைத் தண்ணீரை குடிக்கலாம். கூலிங் தண்ணீர் குடிப்பதால் தாகம் தீரப் போவதே இல்லை. எனவே பானைத் தண்ணீரில் சுக்குப் பொடி, ஏலக்காய் , எலுமிச்சை சாறு, வெல்லம் கலந்து குடிப்பதால் உடலுக்கு தேவையான நீரும் கிடைக்கும்; உடல் ஆற்றலோடும் இருக்கும்.

குடல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக பழைய சோறு: சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுளார்கள். அதில் அறுவை சிகிச்சை இல்லாமலேயே பழைய சோறு உட்கொள்வதன் மூலம் குடல் பிரச்சினைகளை சரிசெய்ய முடியும் என்கிறார்கள். அது தொடர்பாக மேலதிக ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அல்சர் தொடங்கி குடலில் ஏற்படும் கேன்சர் வரை வராமல் தடுக்க இந்த பழைய சோறுக்கு சக்தி உள்ளது.பழைய சோறு சாப்பிட்டால் பெரும்பாலும் குடல் பிரச்சினைக்கு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய அவசியம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x