

இந்தியா: காலநிலை மாற்றத்தால் இதுவரை மலேரியா நோய் இல்லாத நாடுகளுக்கு கூட புதிதாக மலேரியா பர வாய்ப்பு உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றம் என்பது மலேரியா நோய் பரவலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதைத் தடுக்க வேண்டும் புதுமையான முயற்சிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் பல கொடூர நோய்களுக்கு கூட இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியிவில்லை. அப்படிப்பட்ட நோய்களில் ஒரு நோய்தான் மலேரியா. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி ஒவ்வொரு ஆண்டு 241 மில்லியன் பேர் மலேரியாக நோயால் பாதிக்கப்படுகின்றனர். 6.27 லட்சம் மரணங்கள் உலக அளவில் பதிவாகி உள்ளன. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மலேரியா நோயால் அதிக அளவு மரணம் அடைகின்றனர். இதைக் கட்டுப்படுத்த முதல் மலேரியா தடுப்பூசிக்கு கடந்த 2021-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்தது. 2019-ம் ஆண்டு சோதனை முறையில் செயல்படுத்தபட்ட இந்த தடுப்பூசி கடந்த ஆண்டு பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
1 மில்லியன் தடுப்பூசி
RTS, S/AS01 என்னும் மலேரியா தடுப்பூசி தற்போது வரை ஆப்பிக்கா நாடுகளில் 1 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கானா, கென்யா மற்றும் மலாவியில் உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி காரணமாக 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் குழந்தைகளின் உயிரை பாதுகாக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கூறும்போது, "இந்த தடுப்பூசி ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றும். உயிர்களைக் காப்பாற்றவும், மலேரியா இல்லாத உலகத்தை நோக்கி உருவாக்கவும் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இலக்கு
2030 ஆண்டுக்குள் மலேரியா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் இலக்குகளை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோயின் தாக்கத்தை குறைந்தபட்சம் 90 சதவீதம் குறைப்பது, 35 நாடுகளில் மலேரியாவை ஒழிப்பு, மலேரியா இல்லாத நாடுகளில் மலேரியா பரவாமல் தடுப்பது, மரணங்கள் கட்டுபடுத்துவது உள்ளிட்ட இலக்குகளை நிர்ணயம் செய்து உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டுவருகிறது.
இந்தியாவும், தமிழகமும்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மலேரியா பாதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. 2017ம் ஆண்டு இந்தியாவில் 8 லட்சம் மலேரியா பாதிப்புகளும், 194 மரணங்களும் பதிவானது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டில் 1.58 லட்சம் மலேரியா பாதிப்புகளும், 80 மரணங்களும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு 5 ஆயிரம் பாதிப்பும் 200 மரணங்களும் பதிவாகியது. ஆனால், 2021ம் ஆண்டு 772 பாதிப்புகள் காணப்பட்டது. ஆனால், மரணம் ஏதும் பதிவாகவில்லை.
அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்
மலேரியா கட்டுப்படுத்த செய்து வரும் பணிகளுக்கு அச்சறுத்துல் அளிக்கும் வகையில் காலநிலை மாற்றம் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலேரியாவுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் சிக்கலான தொடர்பு உள்ளது. காலநிலை மாற்றம் மலேரியா பாதிப்பு உள்ள பகுதிகளில், பாதிப்பு இல்லாத பகுதிகளில் மலேரியா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகரிக்கும் வெப்பநிலை, மழைப் பொழிவு மற்றும் ஈரப்பதம் அதிக அளவு மலேரியா கொசுக்கள் பரவ வழிவகை ஏற்படுத்தும். இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கூட்டு முயற்சி
மலேரியா கட்டுப்படுத்த கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்று உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், "மலேரியா நோய்ச் சுமையைக் குறைக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் புதுமைகளைப் பயன்படுத்த வேண்டும். புதிய நோய் கட்டுப்பாட்டு முறைகள், நோய் கண்டறிதல், மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற கருவிகள் ஆகிவற்றில் முதலீகளை செய்ய வேண்டும்” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.