சோகத்தில் கரையும் டீன் வயதினரின் வாழ்க்கை... மகிழ்வூட்டும் வழிதான் என்ன?

சோகத்தில் கரையும் டீன் வயதினரின் வாழ்க்கை... மகிழ்வூட்டும் வழிதான் என்ன?
Updated on
2 min read

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இருக்கும் டீன் வயதினர் அதிக வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். உலகம் அவர்களின் உள்ளங்கைகளுக்குள் சுருங்கி வேடிக்கை காட்டுகிறது. இந்த அதீதச் சுருக்கம், அவர்களின் மகிழ்ச்சியையும் சுருக்கிக் கொண்டதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதின்மவயதினர் அதிமான சோகத்தால் தத்தளிக்கிறார்கள். ஒருவர் இருவர் இல்லை, பெரும்பாலானவர்களுக்கு இந்தச் சிக்கல் இருக்கிறது. இதற்கும் அவர்கள் அனுபவித்து வரும் வசதிகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? - டீன் வயதினர் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை விளக்குகிறார் கான் கரோல்.

ங்கள் வீட்டில் இருக்கும் டீனேஜர்கள் எப்போதுமே சோகமாகவே இருக்கிறார்களா? கொஞ்சம் ஆறுதல் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மட்டும் இந்தப் பிரச்சினை இல்லை. உலகத்தில் பெரும்பாலான டீனேஜ் பருவத்தினர் அப்படித்தான் இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் இந்த மாதம் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, தொடர்ச்சியான சோகம், நம்பிக்கையற்ற உணர்வுடன் இருக்கும் அமெரிக்க உயர் நிலைப் பள்ளி மாணவர்களில் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, 2009-ம் ஆண்டு 26 சதவீதமாக இருந்த எண்ணிக்கை, 2021-ல் 44 சதவீதமாக உயர்ந்துள்ளது என்கிறது.

உலகை இரண்டு ஆண்டுகள் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றும் பொதுமுடக்கமும்தான் காரணம் என நீங்கள் நினைக்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். உங்களுடைய கருத்தை மறுக்கிறார் டெம்பிள் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் லாரன்ஸ் ஸ்டெய்ன்பெர்க். இந்த டீனேஜ் சோகம் என்பது புதியப் போக்கு இல்லை. மாறாக, தொற்று நோய்க்கு முன்பாகவே இந்தப் போக்கு தெளிவான ஒரு தொடக்கம் பெற்று விரிவடைந்துள்ளது என்கிறார்.

இன்னொருபுறம் அட்லாண்டிக் ஊடகத்தின் பத்திரிகையாளரான டெரெக் தாம்சன், அதிகரித்து வரும் இந்த பதின்மவயது பிரச்சினைக்கு வேறு காரணங்களை ஆதாரமாகக் காட்டுகிறார். அதாவது, சமூக ஊடகங்களின் அதிகரிப்பு, குறைந்து வரும் சமூகமயமாதல், அதிக அழுத்தமான உலகச் செய்திகள், நவீன பெற்றோர்களின் போக்குகள் போன்றவை டீனேஜ் கோபத்திற்கு காரணமாகின்றன என்கிறார்.

இவை அனைத்தும் தவறானவையா என்றால், நிச்சயமாக இல்லை. தாம்சன் குறிப்பிடுவதைப் போல, 2012-ம் ஆண்டில் டீனேஜ் சோகம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்தபோது இது நிகழ்ந்திருக்கலாம். இதற்கு அர்த்தம் சமூக ஊடகங்கள் தீங்கிழைப்பவை என்பது இல்லை. நீங்கள் வழக்கமான உங்கள் கணினியிலும் ட்விட்டர், பேஸ்புக் பார்க்கலாம். தாம்ஸனின் அழுத்தமான செய்திகளுக்காவும் ஸ்மார்ட் போன்கள் குற்றம்சாட்டப்படலாம். தாம்சனும் முன் எப்போதையும் விட இப்போது மோசமான செய்திகள் வருவதாக கூறவில்லை. ஆனால், அந்தச் செய்திகள் தங்களின் ஸ்மார்ட் போன்களின் மூலமாக பதின்ம வயதினர் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள்.

ஒருவேளை ஸ்மார்ட்போன்கள் இல்லையென்றால் பத்திரிகையின் வாயிலாக மோசமான செய்திகளை அவர்கள் தெரிந்து கொள்வார்கள் தான். ஆனாலும் டீனேஜர்கள் எப்போதும் ஸ்மார்ட்போன்களிலேயே இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான செய்திகளைப் பார்க்கிறார்கள்.

இறுதியாக, குழந்தை வளர்ப்பு. அதிக வருமானம் உள்ள பெற்றோர்கள் மட்டுமே தங்களின் குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல், படிப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறார்கள். அதனால் இதனை நாம் எல்லா குழந்தைகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது.

அப்படியானால், இது எப்படி பொருந்தும்? மணமுறிவு அல்லது குடும்ப வன்முறை ஏற்பட வழிவகுக்கும். முன்பெல்லாம் ஆண் - பெண்களுக்குள் நடக்கும் சண்டைகளை மூத்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். அப்படிச் சண்டை நடக்கும்போது குழந்தைகளை பெரியவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், இன்று மணமுறிவும், குடும்ப வன்முறையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதனால், டீனேஜ் வயதை அடைவதற்குள் ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் வளர்ந்து வரும் குழந்தைகள் அதிக அளவிலான மனச்சோர்வு, பிற மனநலக் கோளாறுகளால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சரி, உங்கள் டீனேஜ் இளவரசனோ இளவரசியோ மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யவேண்டும்? உங்கள் இணையருடன் சகித்து வாழப் பழகுங்கள். டீனேஜர்களின் கைகளிலிருந்து ஸ்மார்ட்போன்களை பிடிங்கி விடுங்கள் என்கிறார் கான் கரோல்.

தகவல் உறுதுணை: வாஷிங்டன் எக்ஸாமினர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in