Last Updated : 23 Apr, 2022 10:32 PM

6  

Published : 23 Apr 2022 10:32 PM
Last Updated : 23 Apr 2022 10:32 PM

மீண்டும் நமக்கு திண்ணைகள் வேண்டும் - காரணம் என்ன?

ஓவியம் - சுரேந்திரா

ஊருக்கு வெளியே புதிய புதிய குடியிருப்புகள் உருவாகி நகரங்கள் விரைவடைந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், வீடுகள் பெருகி வருவதைப் போல மக்களுக்கிடையேயான உறவுகள் பெருக்கமடையவில்லை. காரணம், வீதிகளில் இருந்து வீடுகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. சமூக உறவுகளை வலுப்படுத்த அண்டைவீட்டாருடன் உறவாட நாம் திட்டமிட வேண்டும். அந்த இணைப்பை வீதிகளில் இருந்து தொடங்க வேண்டும் என்கிறார் எழுத்தாளரும் க்ரீன் இவாலுவேசன் அமைப்பின் நிறுவனருமான அனுபமா மோகன் ராம்.

ன்று சென்னையிலுள்ள குடியிருப்புகளை நான் கடந்து செல்லும்போதெல்லாம், இந்த வீடுகள் ஏன் தெருக்களில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு வீடும் நீண்ட சுற்றுச் சுவர்களால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, தெருவின் பார்வையிலிருந்து உள்ளொடுங்கி இருக்கின்றன.

அந்தக் காலத்தில் தெருக்கள் எப்படி இருந்தன என நினைத்துப் பார்த்தால், தெருக்கள் மக்களின் நடமாட்டங்களால், திண்ணைக் கூட்டங்களால் நிறைந்திருந்தன. வீடுகளுக்குள் ஒரு இணைப்பு இருந்தது. தனிவீட்டிற்கும் பொது வெளிக்குமான இடைவெளிகள் குறைவாகவே இருந்தன. நெருக்கடி மிக்க நகரங்கள், அதன் தெருக்களிலும் மக்கள் கூடிப்பேசி அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

சமூகமாக கூடுதல்: பழைய வீடுகளின் ஒரு அங்கமாக திண்ணைகள் இருந்தன. இந்த திண்ணைகள் தான் ஒரு வீட்டினைத் தெருவோடு இணைக்கும் வேலையைச் செய்து வந்தது. தெருவில் வீட்டைக் கடந்து செல்லும் மனிதர்களை அரட்டைக்கு அழைத்து உட்கார்ந்து பேசும் வாய்ப்பை அந்தத் திண்ணைகள் உருவாக்கித் தந்தன. ஒவ்வொரு மாலை நேரத்திலும் ஏதாவது அரட்டைக் கச்சேரிகள் ஏதாவது ஒரு திண்ணைகளில் நடந்தபடி இருக்கும். திண்ணைகள் வீட்டை மட்டும் இல்லை, தன்மீது அமர்ந்து தெருவின் நடவடிக்கைகளை கவனிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி, மக்களையும் தெருவையும் இணைக்கும் வேலையையும் செய்தன.

துரதிர்ஷ்டவசமாக, அருகருகே வீடுகளால் நிறைந்துள்ள நவீன நகரங்களுக்கான கட்டிடக்கலையின் முகங்கள் மாறியிருக்கின்றன. சுற்றுப்புற சமூகத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தனியுடமையைக் கடைபிடித்து வீதிகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் வீதிகளும் சாலைகளும் மனிதநடமாட்டம் இல்லாமல், வெறும் வாகனங்கள் மட்டும் போகும் இடங்களாக உயிரற்று இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றுப் பரவலால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரண்டு விஷயங்களை நாம் இழந்திருந்தோம். ஒன்று மனிதர்களுடனான தொடர்பு, மற்றொன்று இயற்கையுடனானத் தொடர்பு.

மற்றத்திற்கு ஒரு மரமும் பெஞ்சும் போதும்: மனிதர்கள் எப்போதுமே சமூகம், இயற்கையின் ஒரு அங்கமே. இயற்கையுடனும் சமூகத்துடனும் இருக்கும் தொடர்பு நமது நலமான வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவரும் நமது நவீன நகரங்ளில் வீதிகளுக்கும் வீடுகளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் புதிய சுற்றுச்சூழலை நாம் திட்டமிட வேண்டும். நவீன குடியிருப்பு வாசிகள் சமூகத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியை வீதிகளில் இருந்து தொடங்க வேண்டும்.

இதற்காக நாமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட எல்லைக் கோட்டிலிருந்து வெளியே வர வேண்டும். அதற்காக தங்களின் எல்லை கோடுகளுக்கு வெளியே ஒரு மரத்தை நட்டு அதன் அருகில் ஒரு பெஞ்சை உருவாக்கலாம். இது ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலைத் தருவதுடன், மனிதர்களை மையமாகக் கொண்ட பாதுகாப்பான வீதிகளை உருவாக்கும்.

"ஒன்றை நாம் கட்டமைக்கும் விதமே நமது வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது" என்ற கட்டடக்கலைஞர் நார்மன் ஃபோஸ்டரின் இந்த கூற்றைப் போல, வீதிகளில் இருந்து தனித்து உள்ளடங்கியிருக்கும் வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறி இயற்கை, சமூத்தின் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தும் பரந்த சமூகத்துடன் உள்ளடங்கிய ஒரு வாழ்க்கைமுறைக்கு மெதுவாக மாற முயற்சி செய்ய வேண்டும்.

தகவல் உறுதுணை: தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x