

குற்றவகை திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் காட்டப்படும் பொதுவான கதாபாத்திரங்களில் ஒன்று "சைக்கோபாத்ஸ்" எனப்படும் மனநோய் பாதிப்புக்குள்ளானவர்கள். கொடூரமாகக் கொலை செய்பவர்களாக, பொறுப்பற்ற முறையில் செயல்படுபவர்களாவே அவர்கள் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். இவை, 'மனநோய் பாதிப்புக்குள்ளானவர்களைக் கட்டுப்படுத்த முடியாது', 'அவர்கள் திருத்த முடியாதவர்கள்', 'உணர்ச்சிகளை உணரமுடியாதவர்கள்' போன்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுகின்றன.
ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. மனநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தகவல்களைப் பயன்படுத்துவதிலும், தங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் நடத்தைகளை மாற்றிக் கொள்வதிலும் சிறந்தவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறகு ஏன் சினிமா போன்ற ஊடகங்கள் மனநோயாளிகளை உணர்ச்சியற்றவர்களாகவும், திருத்தவே முடியாதவர்களாகவும் காட்டுகின்றன.
காட்சி ஊடகங்களில் காட்டப்படுவது போல, மனநோய் அவ்வளவு மோசமான ஒன்றா என்பதற்கு அறிவியல் விளக்கம் தருகிறார் 'யேல்' பல்கலைக்கழத்தின் உளவியல் உதவிப் பேராசிரியை ஏரியல் பாஸ்கின் - சோமர்ஸ். 'தி கான்வர்சேஷன்' தளத்தில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது.
ஊடகங்கள் உள்ளங்கைகளுக்குள் சுருங்கி தகவல்களையும், திரைப்படங்களையும் காட்சிப்படுத்தி வரும் இன்றைய சூழலில், மில்லியன் கணக்கான மக்கள் 'க்ரைம்' வகை திரைப்படங்கள் மற்றும் தொடர்களை விரும்பி பார்த்து வருகின்றனர். ஊடகங்களில் ஒளிபரப்பாகும் 'க்ரைம்' வகை நிகழ்ச்சிகள் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் பெரும் வரவேற்று இருக்கும். அவற்றில் வரும் கொடூர வில்லன்களின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களாகவும் பலர் இருப்பதுண்டு.
''விரிவுரைகளுக்காக, குற்ற மனப்பான்மையின் தன்மை குறித்து கருத்தரங்குகளுக்களில் பேசுவதற்காக இத்தகைய தொடர்களை நான் தொடர்ந்து பார்க்கிறேன் என்று என்னை நான் நியாயப்படுத்தி கொண்டாலும், வில்லன்களின் குரூரத்தை ரசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவராக இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்'' என்கிறார் கட்டுரையாளர் ஏரியல் பாஸ்கின் - சோமர்ஸ்.
மனநோயாளிகளும் க்ரைம் தொடர்களும்: க்ரைம் தொடர்களில் வரும் பொதுவான கதாபாத்திரங்களில் ஒன்று மனநோயாளி. இவர்கள் கொடூரமான குற்றங்களைச் செய்வர்கள், பொறுப்பற்ற முறையில் செயல்படுபவர்கள், குற்ற விசாரணையின் போது சிலைபோல அமர்ந்திருப்பவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள். இவை அனைத்தும் கற்பனையானவை தான் என்றாலும் அவற்றின் கதைக்களங்கள் இன்று கலாசாரக் கூறுகளாக மாற்றப்படுகின்றன. பிறரை தொந்தரவு செய்யும் வகையில் வன்முறையில் ஈடுபடுவர்களை மனநோயாளிகள் என்று முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.
இந்தச் சித்தரிப்புகள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்படுத்த முடியாதவர்கள், உணர்ச்சிகளை உணர முடியாதவர்கள், திருத்த முடியாதவர்கள் என்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகின்றன. ஆனால், எனது சொந்த அனுபவம் காட்சிகளின் விறுவிறுப்புகளுக்காக கூறப்படும் மனநோயின் பரபரப்பான கருத்துக்கள் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை என்பதையே காட்டுகின்றன.
மனநோய் என்றால் என்ன? - உளவியலாளர்கள் மனநோயை ஆளுமைக் குறைபாடு என்றே கூறுகிறார்கள். இது வசீகரம், வருத்தம் - வருத்தமின்மை, மனக்கிளர்ச்சி, குற்றவியல் ஆகியவற்றைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. பொதுமக்களில் 1 சதவீதம் பேர் மனநோய்க்கான ஆரம்ப நிலையை கடந்து செல்கிறார்கள். இது 'ஸ்கிசோஃப்ரினியா'வை விட இரண்டு மடங்கு அதிகம். மனநோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபியல் மற்றும் சுற்றுப்புறக் காரணிகள் இதில் பெரும் பங்கு வகிப்பதாக பெரும்பாலான உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். மற்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை விட மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மூன்று மடங்கு அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். நான் மற்றும் எனது சக தோழர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவயதிலேயே ஆயுதங்களைப் பயன்படுத்த கற்றுக்கொள்கிறார்கள், பல்வேறு வகையான பொருள்களை ஆயுதங்களாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை கண்டறிந்தோம்.
ஆனாலும், உண்மை நிலை க்ரைம் தொடர்களில் மிகக் கடுமையாக சித்தரிக்கப்படுவதைப் போல இல்லை. அவைகளில் காட்டப்படுவதைப் போல மனநோய் என்பது வன்முறைக்கு ஒத்ததாக இல்லை. சாதாரண மனிதர்களைக் காட்டிலும், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மைதான். ஆனால் மனநோயை கண்டறிவதற்கு வன்முறையை அளவுகோலாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மனநோய்க்கான முக்கிய பண்புகள் வன்முறையை காட்டாமல், மனகிளர்ச்சி மற்றும் அபாயகரமான நடத்தைகளை வெளிப்படுத்தும் நபர்களிடம் இருப்பதாக சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இத்தகையவர்கள், மற்றவர்களை பயன்படுத்திக் கொள்ளுதல் அவர்களின் செயல்களால் ஏற்படும் விளைவுகளின் மீது சிறிது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பண்புகளை அரசியல்வாதிகள், சிஇஓக்கள் மற்றும் கணக்காயர்களிடம் காணலாம்.
மனநோய் பற்றி அறிவியல் கருத்து: பல க்ரைம் தொடர்கள், ஊடக செய்திகள் மனநோயை உணர்ச்சியின்மை, பயம், வருத்தத்துடன் தொடர்புபடுத்துகின்றன. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ச்சியற்றவர்கள் என்ற நம்பிக்கை பாமர மக்களிடம் மட்டும் இல்லை, சில உளவியளாலர்கள் மத்தியிலும் பரவலாக உள்ளது. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும், பிறருடைய உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவதற்கு குறைவான திறனையே வெளிப்படுத்துகிறார்கள் என்று கணிசமான ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. ஆனால் மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் சரியான சூழ்நிலையில் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு அனுபவிக்க முடியும் என்பதற்கான ஆதாரங்களை நானும் எனது சகாக்களும் கண்டுபிடித்து வருகிறோம்.
மனநோய்க்கும் உணர்ச்சிகளுக்கும், இடையிலான சிக்கலான உறவை வெளிப்படுத்தும் சோதனைகளை நாங்கள் நடத்தி வருகிறோம். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பயம் இல்லாதது குறித்து எளிய ஆய்வக பரிசோதனையை நாங்கள் மேற்கொண்டோம்.
அந்தச் சோதனையில், மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், அதிர்ச்சி மற்றும் அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்தும் போது, அவர்களின் மூளை மற்றும் உடல் பய உணர்வுகளை வெளிப்படுத்தியதை நாங்கள் கண்டறிந்தோம். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் உடையவர்களே. அவர்களுடைய கவனம் வேறு ஏதையாவது நோக்கி செலுத்தும் போது அவர்கள் தட்டையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். இது நாம் அனைவரும் செய்யும் ஒரு செயலாக்கத்தின் தீவிர தன்மையாகும். வழக்கமாக நாம் ஒரு முடிவெடுக்கும் போது உணர்ச்சிகளின் மீது அதிக கவனம் செலுத்துவது கிடையாது. நமது முடிவுகளை வெளிப்படுத்த உணர்ச்சித் தகவல்களை பின்னணியாக பயன்படுத்துகிறோம். ஆனால் மனநோயால் பாதிக்கப்படவர்களுக்கு இந்த விசயத்தில் சில மனத்தடைகள் உள்ளன. அவர்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன. அதனை வெளிப்படுத்துவதில் சில தடங்கள் ஏற்படும் போது அவை புறந்தள்ளப்படுகின்றன.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும், அவர்களின் நோக்கத்திற்கு நேரடியாக பொருத்தமாக இருந்தால் தங்களின் நடவடிக்கைகளை சீர்செய்வதிலும் சிறந்தவர்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் சித்தரிக்கப்படுதைப் போல இயல்பாகவே அவர்கள் உணர்ச்சியற்றவர்களாக இல்லை. பயமில்லாத கொடூர கொலைகாரன் என்ற பிம்பம் மனநோயாளிகள் பற்றிய காலாவதியாகிப்போன அறிவியல் கருத்தின் சித்திரமே.
எல்லோராலும் மாற முடியும்: மனநோய் என்பது நிரந்தரமான மாற்ற முடியாத நிலை என்ற தவறான தீய கருத்தொன்று கதைகள், செய்திகள் மற்றும் பழைய அறிவியல் புனைகதைகளில் மனநோய் பற்றி கூறப்பட்டு வருகிறது. இது நன்மை- தீமை என்ற கருத்தை கட்டமாயம் நியாயப்படுத்தலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் வேறு வகையான கதையை நமக்குச் சொல்கின்றன.
பல இளைஞர்களுக்கு இயற்கையாக, அவர்களின் வளரிளம் பருவத்தின் ஆரம்பத்திலிருந்து வாலிபப்பருவம் அடைவதற்குள் மனநோய்க்கான குணாதிசயங்கள் குறைகின்றன. பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் அரவணைப்பு, தலையீடு இளைஞர்களிடம் உணர்ச்சிகளை அடையாளம் காண உதவுவதுடன் சிக்கலான நடத்தையின் அறிகுறிகளை குறைக்கிறது.
மனநோய்க்கான குணாதியங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் மனநோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் அவர்களின் தேவைக்கு ஏற்றவகையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது அவர்களால் மாற முடியம் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இத்தகைய ஆய்வுகள் மனநோயால் சமூகம் மற்றும் தனிப்பட்ட முறையில் மனநோயால் ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ச்சியற்ற மாற்றமுடியாத வன்முறையாளர்கள் என்ற கட்டுக்கதைகளை சமூகம் கைவிட வேண்டும் என்று நான் நம்புகிறேன். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தையில் ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் வித்தியாசமான வியப்புக்குரிய கதைகளை உருவாக்க அதனை மிகைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.