ஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர் ஷரத் சர்மா தரும் ஆரோக்கிய டிப்ஸ்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

ஊரடங்கில் வெளியே வரக்கூடாது என்பது உண்மைதான். அதற்காக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கவேண்டுமென யார் சொன்னது. உடலில் சுறுசுறுப்பு இருந்தால்தால் உள்ளத்தில் உற்சாகமும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கிறார் டாக்டர் ஷரத் சர்மா. மும்பையின் வாஷியில் உள்ள ஹிரானந்தனி மருத்துவமனை லாபரோஸ்கோபிக் சர்ஜன் ஆவார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுமுப்படுத்தவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது ஒவ்வொருவரையும் சுயதனிமைக்கு தள்ளியது முடங்கிகிடப்பதற்கல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சோம்பலினால் பலரும புதியதாக எதற்கு சமைக்க வேண்டும் என்று பதப்படுத்தப்பட் உணவை நாடுவதுண்டு. அதிக அளவு சோடியத்துடன் கூடிய நாட்பட்ட உணவை உட்கொள்வதால் எடை அதிகரிப்பதை ஒருவர் கவனிக்கலாம் என்கிறார் அவர்.

ஊரடங்கு காலங்களில் ஆரோக்கியமாக இருக்கவும், உடலை சீராகப் பேணிக்காக்கவும் என்ன செய்ய வேண்டும்? டாக்டர் ஷரத் சர்மா தனது பரிந்துரைகளில் மேலும் கூறியுள்ளதாவது:

சரியான ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து மிக முக்கியம்.

நன்கு சீரான உணவை உட்கொள்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் மற்றும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க முடிகிறது. ஆரோக்கியமான உணவு நாள்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், டயட்டரி ஃபைபர், புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் தேவைப்படுவதற்கு ஒவ்வொரு நாளும் பலவிதமான புதிய மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிட வேண்டும்.

முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ளுங்கள் - இது நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

போதுமான தண்ணீர் குடிக்கவும் - ஒரு நாளைக்கு குறைந்தது 5 லிட்டர்.

அதிக எடை மற்றும் பருமனான உங்கள் அபாயத்தை கணிசமாகக் குறைக்க சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

சர்க்கரை இனிப்பு பானங்கள் & குளிர்பானங்கள் தவிருங்கள், எண்ணெய் அதிகமுள்ள உணவை சாப்பிட நேர்ந்தால் மிகக் குறைவாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.

ஊரடஙகில் வெளிப்புற இயக்கங்களை தடைசெய்துள்ள நிலையில், எல்லா வயதினரும் முடிந்தவரை சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம்.

வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும்போது எல்லா நேரத்திலும் உட்கார்ந்துகொண்டிருக்க வேண்டாம். ஒருபக்கமாக சாய்ந்துகொண்டு இருப்பதையும் தவிர்க்கவும்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 3-5 நிமிடங்களுக்கு நகரவும்; நடைபயிற்சி அல்லது கைகால்களை நீட்டி மடக்க வேண்டும் -இது தசையின் அழுத்தத்தைக் குறைக்கவும், எந்தவிதமான மன அழுத்தத்தையும் போக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும் உதவும்.

நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தால் தசை செயல்பாடு அதிகரிக்கிறது, விரைவான எடை அதிகரிக்கும் அபாயத்தையும் குறைக்கிறது.

மேலும் தீவிரமான உடற் பயிற்சிகள் வீட்டிலேயே சுறுசுறுப்பாக இருக்க சிறந்த வழிகளில் முக்கியமானது.

தற்போதைய காலங்களில், நல்ல ஆரோக்கியம், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஓரளவு உடல் செயல்பாடுகளை பராமரிப்பது ஆகியவை உடல் பருமனைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in