

எல்லா ஓவியங்களையும் கலை விமர்சகர்கள் உயிரோவியம் என்று சொல்லிவிடுவதில்லை.அதேபோல் எந்த ஒரு கலை விமர்சகரும் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை உயிரோவியம் எனப் பாராட்டாமல் கடந்ததில்லை.
அப்படிப்பட்ட ஓவியங்களுக்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான யோசனைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞரான வெங்கட்ராம். ஒவ்வோர் ஆண்டும் இவர் நடிகைகளை வைத்து உருவாக்கும் காலண்டர் பிரபலமானது. இந்த ஆண்டு ராஜா ரவிவர்மாவின் 11 ஓவியங்களைப் போல் பிரபல நடிகைகள், ஆடல் கலைஞர்களைப் பயன்படுத்தி காலண்டரை உருவாக்கியுள்ளார் வெங்கட் ராம்.
இந்த காலண்டரானது சுஹாசினி மணிரத்னம் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் 10-வது ஆண்டு விழாவை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2020 காலண்டரில் ரவிவர்மாவின் ஓவியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் திரை நட்சத்திரங்களைக் கொண்டு அழகிய புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சுருதிஹாசன், சமந்தா ரூத் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், நதியா, சோபனா, லிஸ்ஸி லக்ஷ்மி, லக்ஷ்மி மஞ்சு, சாமுண்டீஸ்வரி, பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர் 12 மாதங்களை அலங்கரிக்கின்றனர்.
முழு ஆல்பத்தையும் காண: https://www.hindutamil.in/album/cinema/2271-heroines-in-ravivarman-paintings-9.html