

கிரீன் டீ அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து 'ஜர்னல் ஆஃப் மெடிக்கல் மைக்ரோபயாலஜி' எனும் இதழில், கிரீன் டீயில் நுண்ணுயிர் நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றை நீக்கி நன்மை பயக்கும் பாக்டீரியா இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சூடோமோனாஸ் அரோகினோசா என்ற கிருமி சுவாசக் குழாய் மற்றும் ரத்த ஓட்டம் நோய்த்தொற்றுடன் தொடர்புடையது. இந்தக் கிருமியை அழிப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடோமோனாஸ் அரோகினோசா கிருமித் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது சவாலானதாகவே மருத்துவ உலகில் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிரீன் டீ இந்தக் கிருமியை அழிக்கவல்லது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"சூடோமோனாஸ் அரோகினோசா கிருமித் தொற்று மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானது என, உலக சுகாதார மையம் பட்டியலிட்டுள்ளது. இந்நிலையில், இயற்கையாகக் கிடைக்கும் ஆன்ட்டி பயாட்டிக் மூலம் இதனைச் சரிசெய்ய முடியும் என நாங்கள் நிரூபித்துள்ளோம்," என இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனப் பரவலாக நம்பப்பட்டு வரும் நிலையில், அது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும், கிரீன் டீ நோய்த்தொற்று கிருமியை அழிப்பதிலும் முக்கியப் பங்காற்றுவது தெரியவந்துள்ளது.
ஏஎன்ஐ