சர்ப்ரைஸ் கொடுக்கும் தொழில்!

சர்ப்ரைஸ் கொடுக்கும் தொழில்!
Updated on
1 min read

எந்த ஒரு புதுமையான யோசனையையும் தொழிலாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இரு இளையோர். நண்பர்களின்  பிறந்த நாளை வித்தியாசமாக ஆச்சரியமூட்டும் வகையில் வாழ்த்து சொல்வதைதான் பிசினஸ்ஸாக மாற்றியிருக்கிறார்கள். இதற்காக ‘சர்ப்ரைஸ் மச்சி’ என்ற பெயரில் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் ஒன்றையும் இவர்கள் நடத்திவருகிறார்கள்.

துபாயில் பொறியாளராகப் பணிபுரிந்த சாகுல், தங்களுடைய நண்பர் ஒருவர் பிறந்த நாளை புதுமையாகவும் வித்தியாசமாகவும் கொண்டாடுவது தொடர்பாக சென்னையில் உள்ள தனது தோழி பாக்யாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் வாழ்த்து சொல்வதை பிசினஸாக செய்யும் யோசனை உதித்திருக்கிறது. இது நல்ல யோசனையாக இருக்கவே இரண்டே மாதத்தில் பொறியாளர் பணியை விட்டுவிட்டு சென்னைக்கு பறந்து வந்துவிட்டார் சாகுல்.

surprise-2jpgபாக்யா, சாகுல்right

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தங்களது நண்பர்கள் உதவியுடன் தொழிலை தொடங்கினார்கள். அப்படி தொடங்கிய அந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம், இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோரது பிறந்தநாள், திருமணம், காதலர் தினம், திருமண நாள், அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள்.

விழாக்களை எப்படிக் கொண்டாடூவீர்கள் என்று சாகுலிடம் கேட்டோம். “சிலர் தங்கள் நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாட எங்களை அணுவார்கள். அவர்கள் ஏற்பாட்டின் பேரில் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டுக்கு அந்த நண்பரின் வீட்டுக்கு சர்ப்ரைஸாக சென்று வாழ்த்து தெரிவித்து பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு வருவோம். பொதுவாக சர்ப்ரைஸ் ஆக நடக்கும் விஷயங்களை யாரும் வாழ்க்கையில் மறக்கமாட்டார்கள். அதை மனதில் வைத்துதான் இதை நடத்திவருகிறோம்” என்கிறார் சாகுல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in