

வயிற்றுப் பகுதியில் சேரும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளே தொப்பையாக மாறுகிறது. அதைக் குறைக்கும் வழிமுறைகள் குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா வழங்கும் வழிகாட்டுதல்கள்...
இஞ்சி டீ: இஞ்சி ஓர் அருமையான மருத்துவ குணம் கொண்டது. இது செரிமான பிரச்சினை, நுரையீரல் பிரச்சினை, நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளையும் சரிசெய்ய இஞ்சி பெரிதும் உதவுகிறது. இஞ்சியில் Gingerol எனும் Bio Active Compound இருக்கிறது.
சரி, இஞ்சியை கொண்டு டீ செய்வது எப்படி? - ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் இடித்த இஞ்சி சேர்த்து, நன்கு கொதிக்கவிட வேண்டும். கொதித்த பின்னர் சிறிது அளவு எலிமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். இது சுவையாகவும், வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை சரிசெய்ய இஞ்சி டீ உதவுகிறது.
நமது உடலில் ஏதேனும் கழிவுகள் இருந்தால், அதனை வெளியேற்றி, உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க இது உதவுகிறது. இஞ்சி டீயை தொடர்ச்சியாக உட்கொள்வதன் மூலம் காலையில் தேநீர், காபி குடிக்கும் பழக்கத்தை தடுக்க உதவும். செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு வயிறு உப்புச பிரச்சினை இயல்பாக இருக்கும். அவர்கள் தொடர்ந்து இஞ்சி டீ உட்கொள்ள, செரிமான பிரச்சினை சீராகி தொப்பையை குறைக்க உதவுகிறது. இதேபோல், சைனஸ், வீசிங் பிரச்சினை உள்ளவர்கள், டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களும் தினமும் இஞ்சி டீ உட்கொள்வது மிகவும் நல்லது.
கிவி பழம்: ஸ்ட்ராபெர்ரியை விட கிவி பழத்தில் அதிகப்படியான வைட்டமின்-கே உள்ளது. ஒரு கிராம் ஸ்ட்ராபெரி பழத்தில் 20 மில்லி கிராம் மட்டுமே வைட்டமின்-கே இருக்கும். ஆனால், கிவி பழத்தில் 40.3 மில்லி கிராம் வைட்டமின்-கே இருக்கிறது. வைட்டமின்-கே என்பது நமது உடலில் ரத்த உறைவு இல்லாமல் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. மேலும், வைட்டமின்-கே எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. ரத்த நாளங்களை சுத்திகரிக்க உதவுகிறது.
மேலும், கிவி பழத்தில் வைட்டமின்-சி (Ascorbic acid) இருப்பதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கிவி பழ விதைகள் உட்கொள்வதால், பெண்களுக்கு மாத விடாய் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. பெண்களில் PCOD, உடல் பருமன் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் தினசரி காலையில் கிவி பழச்சாறு பருகலாம். தினமும் காலையில் கிவி பழச்சாறு பருகினால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
கிவி பழச்சாறு தயார் செய்வது எப்படி?: பகுதி அளவு கிவி பழத்தில் தோள் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, ஐந்து அல்லது பத்து புதினா இலைகள், சிறிதளவு இஞ்சி மூன்றையும் சேர்ந்து மிக்ஸியில் அரைத்து ஸ்மூத்தியாக பருகலாம். இதேபோல் இனிப்பாக எடுக்கும் வகையில், நான்கு புதினா இலை, கிவி பழம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதன் உடன் ஊர வைத்த சப்ஜா விதைகள், முந்திரி, பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள், உலர் பழ வகைகள் சேர்த்து பருகினால் உணவு உண்ட திருப்தி ஏற்படும். இதனை காலை உணவுக்கு பதிலாக பருகுவதன் மூலம், உடலுக்கு தேவையான கொழுப்பு கிடைக்க உதவுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாத விடாய் பிரச்சினையை சரி செய்கிறது.
ஒயிட் ஜூஸ்: வெண்ணிறத்தில் உள்ள காய்கறிகள், குறிப்பாக சுரைக்காய், வெண்பூசணி, வாழைத் தண்டு அல்லது வெள்ளரிக்காய். இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. ஏன் என்றால் நறுக்கிய காய்கறிகளிலேயே தண்ணீர் நிறைய கிடைக்கும். இந்த காய்கறி சாற்றியில் Anthocyanin உள்ளது. மேலும், இதில் Anti Oxidants அதிகப்படியாக உள்ளது. இந்த வெண்ணிற காய்கறிச் சாற்றை தொடர்ந்து பருகி வர கிட்னி பிரச்சினை தடுக்கப்படுகிறது.
இது, கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற உதவுகிறது. முக்கியமாக, உடலில் தேவையான நல்ல கொழுப்புகளை தக்க வைக்க உதவுகிறது. இந்த சாற்றில் இஞ்சி, மிளகு மற்றும் உப்பு ஆகியவை சுவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம். இந்த சாற்றை தொடர்ந்த பருகினால், உடல் சூடு குறையும். கிட்னியில் கல் பிரச்சினை, பித்தப் பையில் கல் பிரச்சினை ஆகியவற்றுக்கு அரு மருந்தாக இருக்கிறது. மேலும், சருமத்தில் பொலிவு ஏற்படுகிறது.
Anthocyanin-ன் மற்றோரு முக்கியமான செயல்பாடு என்பது ரத்த செல்களை புதுப்பிக்கச் செய்வது ஆகும். குறிப்பாக பெண்களுக்கு வெண்படிதல் தடுக்கப்படுகிறது. வெயில் காலத்தில் பெண்களுக்கு வெண்படிதல் அதிகப்படியாக காணப்படுகிறது. ஒரு சில பெண்களுக்கு தொற்று பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். அது மாதிரியான விஷயங்களுக்கும் வெண்ணிறச் சாறு என்பது உதவிகரமாக இருக்கிறது.