வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுப்பு
Updated on
1 min read

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு, சுடுமண் பதக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம், அகேட் வகை அணிகலன்கள், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2.04 மீட்டர் ஆழத்தில் 'தங்கத்தால் செய்யப்பட்ட மணி' ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in