பாலின சமத்துவம் பேசும் பள்ளி பாடப்புத்தகம்: கேரள முன்முயற்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: பெரும்பாலான இந்திய வீடுகளில் அப்பாக்கள் சமையலறையில் சமையல் பணிகளை கவனிப்பது என்பது வழக்கத்துக்கு மாறான ஒன்று. இந்த காட்சியை அப்படியே பள்ளி பாடப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளது கேரள அரசு.

பாலின சமத்துவத்தை சுட்டும் வகையில் இந்த முயற்சி அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்பதை குழந்தைகள் மத்தியில் உணர்த்துவதே இதன் நோக்கம் என பாடநூல் குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2 மாத கால கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் போது பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதில் வீட்டின் சமையலறையில் குழந்தைகள் முன்னே தந்தை தேங்காய் துருவுவது, சமையல் பணியை கவனிப்பது போன்ற வரைபடங்கள் (ஸ்கெட்ச்) இடம்பெற்றுள்ளனர். இது பரவலாக கவனம் பெற்றுள்ளது.

இது குறித்த படத்தை கேரள மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் படங்களை பகிர்ந்திருந்தார். அவர் மூன்றாம் வகுப்பு மலையாள மொழி புத்தகம் மற்றும் ஆங்கில புத்தகத்தை பகிர்ந்திருந்தார். அரசின் இந்த முயற்சிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பாசிட்டிவ் வரவேற்பும் கிடைத்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் ஆண்களுக்கு வீட்டு வேலைகள் சார்ந்த பயிற்சிகளை அளிப்பதற்காக முயற்சியை கேரள மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in