

இணைய முகவரிகளைச் சுருக்கித் தருவதைப் போலவே, நீளமான கட்டுரைகளைச் சுருக்கித் தரவும் இணையதளம் ஒன்று உதவியாக இருக்கிறது. சம்மரைஸ் திஸ் (https://www.summarizethis.com/) என்ற இணையதளம்தான் இப்படிக் கட்டுரைகளைச் சுருக்கித் தருகிறது.
இந்தத் தளத்தில் நீளமான கட்டுரையைச் சமர்ப்பித்தால், அதன் சுருக்கமான வடிவத்தை முன்வைக்கிறது. கட்டுரையின் சாராம்சத்தை இந்தச் சுருக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். கட்டுரையின் முக்கியத் தகவல்களை மட்டும் சுருக்கமாகத் தருவதாக இந்தத் தளம் தெரிவிக்கிறது. நீளமான கட்டுரைகளைப் படிக்கப் பொறுமை இல்லாதவர்களுக்கு, இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.