

டெல்லி இந்திரா காந்தி தொழில்நுட்பப் பல்கலைக் கழத்தைச் சேர்ந்த மாணவிகள் குழு, அண்மையில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் கலந்துகொண்டு ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. வேலைவாய்ப்பு சந்தை போக்குகளைத் தெரிந்துகொள்ள இந்தச் செயலி உதவுகிறது. இந்தச் செயலி, பதிவுசெய்யும் உறுப்பினர்களின் திறன்களுக்குப் பொருத்தமான வேலையைச் சுட்டிக்காட்டும். இந்தச் செயலி நகரங்கள், திறன்கள் சார்ந்த வேலைவாய்ப்பு போக்குகள் தொடர்பான தகவலையும் அளிக்கும். திறன் வளர்ச்சி, பயிற்சி தொடர்பான தகவல்களையும் அளிக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.