Published : 23 Apr 2024 08:48 PM
Last Updated : 23 Apr 2024 08:48 PM

கீ பேடில் ‘H’க்கும் ‘L’க்கும் இடையில் பார்க்க... - நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்வது ஏன்?

சென்னை: “கீ பேடில் ‘H’-க்கும் ‘L’-க்கும் இடையில் பார்க்க” என்பதுதான் தற்போது சமூக ஊடகங்களில் தீ போல பரவி வரும் விஷயம். இதுதான் நெட்டிசன்களின் லேட்டஸ்ட் ட்ரெண்டாக மாறி வருகிறது.

ஏதாவது ஒரு தகவலை பிரபலப்படுத்துவதில் தொடங்கி, அதை வைரலாக்குவதில் இன்றைய காலக்கட்டத்தில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்த வகையில், சமூக ஊடகங்களில் எப்போது என்ன செய்தி வைரலாகும் என்பதும் யாரும் அறிந்திடாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அப்படி, இன்று சமூக ஊடகங்களில் லேட்டஸ்ட் ட்ரெண்டாக வைரலாகி வருவது, “கீ பேடில் ‘H’க்கும் ‘L’-க்கும் இடையில் பார்க்க” எனும் இந்த வார்த்தைகள்தான் இன்ஸ்டாகிராம், பேஃஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை வேகமாக ஆக்கிரமித்து வருகிறது.

தனி பயனாளர்கள் தங்களது சொந்த கருத்துகளைப் பதிவிட இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தி வருவது போலவே, ஸ்விகி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தற்போது இந்த ட்ரெண்டை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஐபிஎல் தொடர்பான தங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை பகிர்ந்து இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத்தை அதகளப்படுத்தி வருகின்றனர்.

உண்மையில், கீ பேடில் ‘ஹெச்’-க்கும் ‘எல்’-க்கும் இடையில் பார்த்தால், J மற்றும் K என்ற எழுத்துகள்தான் இருக்கின்றன. இதற்கு Just Kidding அதாவது ‘சும்மா விளையாட்டுக்கு’ என்று அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் சினிமா, அரசியல் பிரபலங்களின் படங்களைப் பதிவிட்டு கூட அவரவருக்கு ஏற்றபடி எழுத்துகளை மாற்றி மீம்ஸ் தயாரித்து வெளியிட்டு நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x