

சிங்கம்புணரி: பெண் பிள்ளைகளுக்கும் சொத்து களை சமமாக பிரித்து கொடுக்க வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே எம்.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ராஜமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில், பெற்றோரின் மிகப் பெரிய சொத்தே குழந்தைகள் தான். உங்கள் மீது நேரம், பணம், முயற்சி உள்ளிட்டவற்றை அவர்கள் முதலீடு செய்கின்றனர். இதை அறிந்து செயல்பட வேண்டும்.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலை அமைதியாக நடத்தி காட்டியுள்ளது. ஆனால், பல நாடுகள் அமைதியின்றி உள்ளன. பெண் பிள்ளைகளுக்கு சொத்துகளை சமமாக பெற்றோர் பிரித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கல்வி, போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.