‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்
Updated on
1 min read

முலான்பூர்: தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் தவான். ஃபிட்னஸ் ரீதியாக உடற்தகுதி பெற்று வருகிறார். இந்த சூழலில் தனது மகன் ஸோராவரின் (Zoravar) பெயர் பொறித்த பஞ்சாப் அணியின் ஜெர்சியை காண்பித்தும், அதனை அணிந்தும் உள்ள புகைப்படத்தை அந்த பதிவில் தவான் பகிர்ந்துள்ளார்.

தவான், அவரது மனைவி ஆஷா முகர்ஜியுடனான திருமண பந்தத்தில் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன் பிறகு அவர் தனது மகனை சந்திக்கவில்லை. அது குறித்து சமூக வலைதள பதிவுகளில் அவர் தெரிவிப்பது வழக்கம். மகன் குறித்த உருக்கமான பதிவுகளை சமயங்களில் பகிர்வார். அந்த வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் விளையாடி 152 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது பேட்டிங் சராசரி 30.40. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in