மெக்சிகோ மாடல் அழகியை மணந்தார் சொமாட்டோ நிறுவன சிஇஓ

மெக்சிகோ மாடல் அழகியை மணந்தார் சொமாட்டோ நிறுவன சிஇஓ
Updated on
1 min read

புதுடெல்லி: சொமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் மெக்சிகோவைச் சேர்ந்த மாடல் அழகியும் ஸ்டார்ட்அப் நிறுவனருமான கிரேசியா முனோஸை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பே இவர்களது திருமணம் நடந்துவிட்டது. ஆனால், இந்தத் திருமணம் குறித்து அவர்கள் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை. தீபிந்தர் கோயல் மற்றும் கிரேசியா முனோஸ் ஆகியோர் தங்கள் தேனிலவுக்கு பிப்ரவரி மாதம் சென்றதாக கூறப்படுகிறது.

மெக்சிகோவில் பிறந்த கிரேசியா முனோஸ், மாடலிங் துறையில் இயங்கி வந்தார். தற்போது அவர் ஆடம்பர நுகர்வோர் தயாரிப்பு சார்ந்து ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வருகிறார்.

முனோஸ் தனது இன்ஸ்டாகிராம் பயோவில், தான் மெக்சிகோவில் பிறந்ததாகவும், இப்போது இந்தியாவில் வீட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். டெல்லியின்பிரபலமான இடங்களைப் பகிர்ந்து, அதன் கீழ் ‘என் புதிய வீட்டில் என்புதிய வாழ்க்கையின் காட்சிகள் இவை’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது 41 வயதாகும் தீபிந்தர் கோயலுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அவர் முன்னதாக ஐஐடி-டெல்லியில் படிக்கும் போது சந்தித்த காஞ்சன் ஜோஷியை திருமணம் செய்து கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in