நாக்பூரின் பிரபல தேநீர் கடைக்காரர் தயாரித்த தேநீரை பருகிய பில் கேட்ஸ்!

டோலி சாய்வாலா மற்றும் பில் கேட்ஸ்
டோலி சாய்வாலா மற்றும் பில் கேட்ஸ்
Updated on
1 min read

நாக்பூரின் சதர் பகுதியில் சாலையோரத்தில் தேநீர் கடையை நடத்தி வருகிறார் ‘டோலி சாய்வாலா’ என பெரும்பாலானவர்களால் அறியப்படும் தேநீர் கடைக்காரர். தனித்துவமான ஸ்டைலில் தேநீர் தயாரிப்பார். சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம். அவர் தயாரித்த தேநீரை பில் கேட்ஸ் ருசித்துள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஓடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடனான சந்திப்பு, அந்த மாநிலத்தின் புவனேஷ்வர் பகுதியில் உள்ள குடிசை பகுதிகளுக்கு சென்றும் வந்துள்ளார். அடுத்தடுத்த நிகழ்வுகளால் படு பிஸியாக உள்ள அவர், டோலி சாய்வாலாவின் கைவண்ணத்தில் தயாரான தேநீரை பருகியுள்ளார்.

‘இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம். அதில் தேநீர் தயாரிப்பும் அடங்கும்’ என கேப்ஷன் கொடுத்துள்ள பில் கேட்ஸ், டோலி சாய்வாலா உடனான வீடியோவை பகிர்ந்துள்ளார். ‘ஒரு டீ’ என பில் கேட்ஸ் சொல்ல இந்த வீடியோ தொடங்குகிறது. தொடர்ந்து டோலி சாய்வாலா தனது ஸ்டைலில் தேநீர் தயாரித்து கொடுக்க, அதை பில் கேட்ஸ் பருகுகிறார். இந்த வீடியோ சுமார் 4 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.

டோலி சாய்வாலா: நாக்பூரின் சதர் பகுதியில் உள்ள பழைய விசிஏ மைதானத்தின் அருகே சாலையோர தேநீர் கடையை நடத்தி வருகிறார் சமூக வலைதளத்தில் மிக பிரபலமாக அறியப்படும் ‘டோலி சாய்வாலா’. மிகவும் ஸ்டைலாக தேநீர் தயாரிப்பு பணியில் அவர் ஈடுபடுவது வழக்கம். தேநீர் தயாரிப்பு மற்றும் அதை வடிக்கையாளர்களுக்கு பகிர்வது வரை அனைத்திலும் தனது ஸ்டைலை பின்பற்றுவார். அதன் காரணமாகவே சமூக வலைதள பயனர்கள் அவரது வீடியோக்களை அதிகளவிலான பார்வைகளை பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in