கல்லல் அருகே விவசாயத்தை மீட்டெடுத்த பட்டதாரிக்கு கிராம மக்கள் விருது

கல்லல் அருகே விவசாயத்தை மீட்டெடுத்த பட்டதாரிக்கு கிராம மக்கள் விருது
Updated on
1 min read

காரைக்குடி: கல்லல் அருகே விவசாயத்தை மீட்டெடுத்த பட்ட தாரிக்கு, கிராம மக்கள் விருது கொடுத்து பாராட்டினர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வேப்பங்குளம் ஊராட்சி புதுவேப்பங்குளம், பழைய வேப்பங்குளம், தேர்வலசை, அச்சினி, கல்குளம், சந்தனேந்தல், தெம்மாவயல் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. இங்கு 2,000 பேர் வசிக்கின்றனர். 6 கண் மாய்கள், 600 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. தொடர் வறட்சியாலும், பராமரிப்பு இல்லாததாலும் கண்மாய், வரத்துக் கால்வாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. இதனால் 600 ஏக்கரும் தரிசாக விடப்பட்டது.

இந்நிலையில், தனது தாயார் பிறந்த ஊரான வேப்பங்குளத்தில் விவசாயம் அழிந்து வருவதை அறிந்த எம்சிஏ பட்டதாரி திருச்செல்வம் அதை மீட் டெடுக்க முயற்சி எடுத்தார். கிராம மக்களின் கூட்டு முயற்சியோடு 2019-ம் ஆண்டு அங்குள்ள கண்மாய்கள், வரத்துக் கால்வாய்களை சீரமைத்தார். அதைத் தொடர்ந்து அந்த கிராமம் நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்றது. இதனால் கோடையிலும் காய்கறிகள், பயறு வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் திருச்செல்வம் நெல்லை அரிசியாக மதிப்பு கூட்டி, அந்த அரிசிக்கு ‘வேப்பங்குளம் பிராண்டு’ என பெயரிட்டு ஆன்லைனில் விற்பனை செய்தார். வேளாண்மை அதிகாரிகள் உதவியோடு உழவர் உதவி மையத்தை ஏற்படுத்தி விவசாயிகள் விளைவித்த மா, சப்போட்டா, தேங்காய், புளி, பனங்கிழங்கு, காய்கறிகளை இணையம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் அருகேயுள்ள செவரக்கோட்டை, கீழப் பூங்குடி ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தனித் தனியாக திருச்செல்வத்தை வரவ ழைத்து விருது வழங்கி பாராட்டினர்.

மேலும் செவரக்கோட்டையில் விவசாயத்தை மேம்படுத்த அவரை ஆலோசகராகவும் நியமித்துள்ளனர். இது குறித்து திருச்செல்வம் கூறுகையில், செவரக்கோட்டை, கீழப்பூங்குடி ஆகிய கிராமங்க ளிலும் விவசாயத்தை மீட்டெடுக்க என்னால் முடிந்த உதவிகளை செய்ய உள்ளேன். இதேபோல் விவசாயம் தொடர்பாக யார் கேட்டாலும் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in