புதுச்சேரி, அந்தமான் பகுதிகளுக்கு ஜிப்மரின் ‘டெலி - மனஸ்’ மனநல சேவை தொடக்கம்

புதுச்சேரி, அந்தமான் பகுதிகளுக்கு ஜிப்மரின் ‘டெலி - மனஸ்’ மனநல சேவை தொடக்கம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி, அந்தமானுக்கு ‘டெலி - மனஸ்’ என்ற தொலைபேசி மூலம் அளிக்கும் மன நல சேவையை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இச்சேவையை ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் நேற்று தொடங்கி வைத்தார். இச்சேவை தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு மனநல பாதிப்பு உள்ளது. ஒரு சதவீதம் மக்களுக்கு தீவிர மனநல பாதிப்பு உள்ளது. மன நல மருத்துவர்கள் குறைவாக உள்ள காரணத்தினாலும்,

அதிக மனநல வல்லுநர்கள் பெரு நகரங்களில் இருப்பதாலும் இச்சேவையை பெறுவதில் சிரமம் உள்ளது. தூக்க மின்மை, தேர்வு பயம், போதை பழக்கம், மனக்கவலை போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கு யாரிடம் உதவி பெறுவது என்பதில் குழப்பம் உள்ளது. இதற்கான தனிப்பட்ட இலவச தொலைபேசி மனநல ஆலோசனை எண் 14416 (டெலி-மனஸ்),

இந்திய அளவில் கடந்தாண்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வாயிலாக நிறுவப்பட்டது. மேலும், இச்சேவை இந்திய மக்களின் மனநலத்தை மேம்படுத்த உதவும். புதுச்சேரி மற்றும் அந்தமான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in