

மதுரை: மதுரை டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணன், ஆணிப் படுக்கையில் படுத்து மூன்று நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து கின்னஸ் படைத்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளரும் இன்ஜினியருமான நாராயணன், ஏற்கெனவே ‘டேக்வாண்டோ’ விளையாட்டில் பல பிரிவுகளில் 29 முறை கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளார். தற்போது அவர் ஆணிப் படுக்கையில் படுத்து மூன்று நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் மூன்று நிமிடத்தில் 50 கான்கிரீட் கற்கள் உடைத்தது உலக சாதனையாக இருந்துள்ளது. கடினமான உலக சாதனையை முயற்சித்த பயிற்சியாளர் நாராயணனை கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் பாராட்டி சான்றிதழை வழங்கி கவுரவித்தனர். டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணனின் 30-வது கின்னஸ் சாதனை இதுவாகும்.