ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான் பெயர்கள் சூட்டல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கேந்திரபாரா: ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த 23-ம் தேதி அரிபடா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணு என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சந்திரயான் என பெயர் வைக்கப்படவுள்ளது.

மேலும் சந்திரா அல்லது லூனா என பெயர் வைக்கலாம் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். குழந்தை பிறந்து 21-வது நாளில் நடைபெறும் பூஜைக்குப் பின் பெயர் வைப்பது ஒடிசா மாநிலத்தில் பின்பற்றப்படும் பாரம்பரியம். அன்றைய தினத்தில் மேற்கண்ட 3 பெயரில் எதை வைப்பது என இறுதி முடிவு செய்யப்படும் என ராணு கூறினார்.

இதேபோல் தலச்சுவா கிராமத்தைச் சேர்ந்த துர்கா, நிலக்கந்தபூரைச் சேர்ந்த ஜோஷின்யராணி பால், அங்குலே கிராமத்தை சேர்ந்த பெபினா சேதி ஆகியோரும் கடந்த புதன்கிழமை மாலை குழந்தை பெற்றனர். துர்காவின் பெண் குழந்தை, மற்ற இருவரின் ஆண் குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வதாகெரா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு பிரக்யான் (ரோவர்), விக்ரம் (லேண்டர்) என பெயரிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in