

துபாய்: முகம்மது ஆதில் கான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். துபாயில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் உட்புற வடிவமைப்பாளராக வேலை பார்க்கிறார்.
டைசெரோஸ் நிறுவனம் ‘எமிரேட்ஸ் ட்ரா’ என்ற பிராண்டின் கீழ் லாட்டரி சீட்டுகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனை செய்து வருகிறது. இந்த லாட்டரி சீட்டுகளை முகம்மது ஆதில் கான் வாங்கியுள்ளார். இந்நிலையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு மெகா பரிசு கிடைத்துள்ளது.
‘பாஸ்ட் 5’ வகைமை லாட்டரியில் வெல்பவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 லட்சம் தொடர்ந்து வழங்கப்படும். ஒரு லாட்டரி சீட்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.500 ஆகும். முகம்மது கான் மொத்தம் ரூ.2,500 செலவிட்டு 5 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.
அவர் வாங்கிய சீட்டுக்கு பரிசு கிடைத்திருக்கும் நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவருக்கு ஒவ்வொரு மாதமும் அந்த லாட்டரி நிறுவனம் ரூ.5.5 லட்சம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.