“4 நாள்தான் வேலை செய்வேன், ரூ.50000 சம்பளம் வேணும்” - நேர்முகத் தேர்வில் நிபந்தனை வைத்த விஐபி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கொல்கத்தா: அண்மையில் பட்டம் பெற்றவரும், எதவித முன் அனுபவமும் இல்லாத வழக்கறிஞருமான ஒருவர் தனது நேர்முகத் தேர்வில் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக 4 நாட்கள் தான் வேலை செய்வேன், ரூ.50 ஆயிரம் சம்பளம் வேண்டும் என்பது அதில் அடங்கும்.

அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்திய அனுபவ வழக்கறிஞர் ஒருவர் இதை தெரிவித்துள்ளார். இந்த அனுபவத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாக பகிர்ந்துள்ளார். அதுவும் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர், நீதிமன்றத்துக்கு செல்ல மாட்டேன். அலுவலகத்தில் இருந்தபடி தான் வேலை பார்ப்பேன் எனவும் சொல்லி உள்ளார்.

“உதவி வழக்கறிஞர் பணிக்காக ஒருவரை நேர்காணல் செய்தேன். அவரோ வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை செய்வேன், நீதிமன்றம் செல்ல மாட்டேன், ரூ.50 ஆயிரம் சம்பளம் வேண்டும் என தெரிவித்தார். தற்போதைய தலைமுறையை சேர்ந்தவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்” என கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் ஜுமா சென் ட்வீட் செய்தார். இவர்கள் சட்டக் கல்லூரியில் என்ன படித்தார்கள் என தெரியவில்லையே என மற்றொரு வழக்கறிஞரான சதாதீப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in