

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் இயற்கை முறையில் காய்கறிகளை கைதிகள் விளைவிக்கின்றனர்.
புரசை உடைப்பு திறந்தவெளிச் சிறை 2013-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு பல்வேறு சிறைகளில் இருந்து நன்னடத்தைக் கைதிகள் கொண்டு வரப்படுகின்றனர். தற்போது 51 கைதி கள் உள்ளனர். 85 ஏக்கரில் அமைந்த இந்தச் சிறையில் 35 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பணியை கைதிகளே மேற்கொள்கின்றனர்.
ஆரம்பத்தில் கரடு, முரடாக இருந்த இந்தச் சிறை வளாகம் தற்போது பசுமையாக காணப்படுகிறது. இங்கு கத்தரி, வெண்டை, புடலை, அவரை, பீர்க்கை, உளுந்து, வாழை, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன. மேலும், தென்னை, கொய்யா, நெல்லி, முந்திரி, பலா, எலுமிச்சை, ரோஸ்உட், சந்தனம், தேக்கு, மகாகனி உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இது தவிர ஆடு, நாட்டு மாடுகளும் வளர்க்கப்படுகின்றன.
அவற்றின் கழிவுகளைப் பயிர்களுக்கு இயற்கை உரங்களாகப் பயன்படுத்து கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மதுரை மத்தியச் சிறையில் உள்ள அங்காடிகளில் விற்பனை செய்யப் படுகிது. அவர்கள் கடந்த 3 மாதங்களில் 2 டன் வரை காய்கறிகளை விளை வித்தனர். மேலும் விவசாயப் பரப்பை அதிகரிக்கும் வகையில் கிணறு அமைக்க சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி முயற்சி எடுத்துள்ளார்.
இது குறித்து சிறைத்துறை டிஐஜி பழனி கூறுகையில் ‘இங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயப் பணிகளில் ஈடுபடும் கைதிகளுக்கும் மன அழுத் தம் குறைகிறது. இயற்கையோடு வாழ்வதால் மனமாற்றம் அடைகின்றனர். திறந்தவெளி சிறை மீது டி.ஜி.பி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். விவசாயப் பரப்பை அதிகரிக்க உள்ளோம்’ என்றார்.