மயிலுடன் நட்பு பாராட்டும் போலீஸ் அதிகாரி!

மயிலுடன் போலீஸ் அதிகாரி
மயிலுடன் போலீஸ் அதிகாரி
Updated on
1 min read

ஹார்டோய்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோய் பகுதியில் காவல் துறை அதிகாரி ஒருவர், மயிலுடன் நட்பு பாராட்டி வருகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இணைய வெளியில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த வீடியோ.

அவ்வப்போது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் இடையிலான நட்பு குறித்து நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு. மனிதன் - காகம், மனிதன் - நாரை என அரிதான இணக்கம் குறித்த செய்திகள் இதில் அடங்கும். அந்த வகையில் ஹார்டோய் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலைய அதிகாரி ஒருவர், தேசிய பறவையான மயில் உடன் நேசத்துடன் பழகி வருகிறார்.

சுமார் 51 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் மயிலுக்கு தன் கையில் இருக்கும் உணவை தருகிறார். அதை அந்த மயில் அழகாக உட்கொள்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in